Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " அருணகிரி":

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5 (10/9/08)


மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4 (9/25/08)

மக்கா மசூதி ஆக்கிரமிப்பானது மார்க்கத்திற்கு எதிரானது என்றும் அதனை விடுவிக்க வேண்டியது அரசின் கடமை என்றும் பின்-பாஜின் மதத்தலைமை ஃபத்துவா விதித்து அறிவிப்பு விடுத்தது. இதற்கு ஆதரவாக "அவர்கள் உங்களோடு போரைத்துவங்கும் வரை நம்பிக்கையற்றோருடன் புனித மசூதியில் போரிடாதீர்கள்; அவர்கள் போரிடத்துவங்கினால் அவர்களை வெட்டி வீழ்த்துங்கள்" என்ற குரான் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டன. இவை முஸ்லீம்கள் அல்லாதோருக்குத்தான் ("நம்பிக்கையற்றோர்") பொருந்தும் என்றாலும் நம்பிக்கையற்றவர் போல நடந்து கொண்ட ஜுஹைமான் படைகளும் முஸ்லீம்கள் அல்லாதோராகவே கருத்தப்படுவர் என்று சவுதி மதத்தலைமை விளக்கம் அளித்தது. இந்த விளக்கமே பிற்காலத்தில் அமெரிக்க நட்பு முஸ்லீம் நாடுகளின் மேல் - சவுதி அரசு உட்பட- ஜிஹாதியத் தாக்குதல் தொடுக்க வஹாபி ஜிஹாதிகளாலும் அல்-க்வைதாவாலும் வசதியாக உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்டது. ஜுஹைமான் போன்ற தீவிர முஸ்லீம் ஒருவனையே அவனது செயல்களின் அடிப்படையில் அவநம்பிக்கையாளன் என்று சொல்ல முடியும் என்றால், கிறித்துவ மேற்குடன் நட்பு பாராட்டும் முஸ்லீம் நாடுகளுக்கும் இது பொருந்தும் என்பதே பயங்கரவாத ஜிஹாதிகள் தரப்பு வாதமாக ஆனது.

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3 (9/19/08)

கண்மூடித்தனமான வஹாபிய வெறுப்பின் உச்சகட்டமாக மக்கா மசூதி ஆக்கிரமிப்ப்ற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத இந்துக்கள்மீது ஹைதராபாதில் கொடுமையான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்துக்களின் கடைகள் சூறையாடப்பட்டன. வெள்ளிக்கிழமை நமாஸ் முடித்து விட்டு வந்தால் கலவரம் என்ற வகையில் வெள்ளிக்கிழமை கலவரங்கள் ஹைதராபாத்தில் வாடிக்கையாகிப்போனது இந்த கலவரத்திற்குப் பிறகுதான். சுதந்திரத்திற்குப்பின் தடை செய்யப்பட்டு 1957 தடை விலக்கப்பட்ட எம்.ஐ.எம் (Majlis-e-Ittehadul Muslimeen) என்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சி இந்தக் கலவரங்களில் முன்னணி வகித்தது. மதக்கலவரங்களைத் தொடர் உரமாக்கி பின்னாளில் இக்கட்சி பெரும் வளர்ச்சி கண்டது (2). இந்த எம்.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் பங்களாதேஷ் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் ஹைதராபாத் வந்தபோது அவரை நாற்காலிகளால் தாக்கியது நினைவிருக்கலாம். இதைத்தொடர்ந்து அவருக்கு விடப்பட்ட வெளிப்படையான மிரட்டல்களால் அவர் ஒளிந்தும், இடம் பல மாறியும், ஒரு கட்டத்தில் இந்தியாவை விட்டே வெளியேறி வேற்று நாட்டிலும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 2 (9/11/08)

எகிப்தில் நாசர் பதவிக்கு வந்ததும் அராபிய நிலப்பரப்பில் வாழ்ந்த அனைவரையும் (முஸ்லீம் அல்லாதவரையும் சேர்த்து) அராபிய தேசியவாதம் என்ற பெயரில் மதச்சார்பற்ற அணியில் திரட்ட முற்பட்டார். இது மதவாத சவுதியை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. எனவே இதற்கு எதிராக உலகளாவிய இஸ்லாமிய உம்மா உருவாக்கப்பட வேண்டும் என்று சவுதி அரசு பிரசாரிக்கத் தொடங்கியது. பெருகி வரும் எண்ணெய்ப்பணமானது, பல இஸ்லாமிய நாடுகளிலும் உலகளாவிய உம்மா என்ற பெயரில் எல்லைதாண்டிய இஸ்லாமிய மதவாதத்தை வளர்க்க வாரியிறைக்கப்பட்டது. மத்திய கிழக்கில் மத அடிப்படைவாதம் குறைந்திருந்த நாடுகளை எதிர்க்க அன்று உருவான முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்ற அமைப்பு எகிப்திலும் சிரியாவிலும் தடை செய்யப்பட, சவுதி மன்னர் ஃபய்ஸல் (King Faizal) இந்த அமைப்புக்கு அடைக்கலம் தந்தது மட்டுமன்றி இவர்களை சவுதியின் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் பெரும் சம்பளத்தில் வேலைக்கும் அமர்த்தினார். இதில் படித்த பல மாணவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகளாக பிற்காலத்தில் உருவெடுத்தனர். அப்படி அங்கு படித்த ஒருவன்தான் சவுதி கட்டிட காண்ட்ராக்டர் முகமது பின் லாடனின் மகனான ஒஸாமா பின் லாடன்.

மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 1 (9/10/08)

1979 நவம்பர் 20- மக்கா மசூதி ஜுஹைமான் அல் உத்தய்பி என்ற சுன்னி இஸ்லாமியனின் படையால் கைப்பற்றப்பட்டது. அதனை விடுவிக்க நடந்த போரில் மக்கா மசூதி கவச வண்டிகளால் இடிக்கப்பட்டு, விஷ வாயு பாய்ச்சப்பட்டு, கொலைக்களமாக ஆனது. இந்த போர் மத்திய கிழக்கிலும், குறிப்பாக சவுதியிலும் கருக்கொண்ட பல அடிப்படைவாத இயக்கங்களுக்கும் பயங்கரவாத நிகழ்வுகளுக்கும் உரமானது. அடிப்படைவாத வஹாபியிசம் எண்ணெய் வள பண பலத்துடன் உலகெங்கும் தன் ஜிஹாதி வித்துக்களைப் பரப்பத் தொடங்கியது. மசூதி விரிவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்த முகமது பின் லாடன் என்ற சவுதி கட்டிட காண்ட்ராக்டர் மகனான ஒஸாமா என்ற தீவிர இஸ்லாமிய இளைஞன் பின்னாளில் உலகம் வெறுக்கும் பயங்கரவாதியாக மாற உந்துதல் தந்தது.

உயிர்த்தெழும் ஔரங்கசீப் (3/15/08)

தனது சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையை சாகும் வரை சிறையில் அடைத்து வைத்திருந்த கடும் இஸ்லாமிய அடிப்படைவாதியான அவுரங்கசீப் மொகலாய மன்னர்களிலேயே உன்னதமான முன்மாதிரியாக பாகிஸ்தான் பாட நூல்களில் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் ஜிஹாதி பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மது, லஷ்கர்-இ-ஜாங்வி, ஹர்கட்-அல்-இஸ்லாமி ஆகிய அமைப்புகள் ஔரங்கசீப்பை ஆதர்சமாகவும் ஔரங்கசீப் ஆட்சியை மொகலாய இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலமாகவும் முன்னிறுத்தி, அதுபோன்ற ஆட்சியை மீண்டும் இந்தியாவில் நிறுவுவதையே தங்கள் லட்சியமாக விவரிக்கின்றன.

சாந்தாராம்- ஒரு எழுத்தாளனின் மாஃபியா அனுபவங்கள் (12/21/07)

தத்துவ குரு என்றும் தந்தை என்றும் தான் மதித்த பம்பாய் மாஃபியாவின் வலிய தலைவன் இறுதியில் தன்னை உபயோகப்படுத்தி ஏமாற்றும் மதப்போராளியாக வெளிப்பட, ஏழை சேரி ஜனங்களும் , எளிய கிராம மக்களும் மானுட நேயப் படிப்பினையை சாந்தாராமுக்கு இயல்பாக வழங்கும் குருவாக ஆகின்றனர்.

"பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்" - மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை (11/29/07)


ஒரு மத அழிப்பின் கதை (6/28/07)

1972-இல் விடுதலையடைந்த பங்களாதேஷ் புதிய நாட்டிற்கு அரசியலமைப்புச்சட்டத்தை மதச்சார்பற்றதாகவே இயற்றியது. ஆனால், 1977-இல் "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்" என்ற இஸ்லாமிய வாசகம் அரசியலமைப்பின் முதல் வாசகமாக சேர்க்கப்பட்டது. இஸ்லாமியர் அல்லாதோர் அரசியலமைப்பின்படி ஜனாதிபதியாக முடியாது. இஸ்லாமிய மதவெறி நாடாக பங்களாதேஷ் உருப்பெறும் இந்த காலகட்டத்தில் முதன்மை ஆதரவு தெரிவித்த மூன்று நாடுகள்: சவுதி அரேபியா, லிபியா, சீனா ஆகியவை. 1988-இல் இஸ்லாம் பங்களாதேஷின் அரசு மதமாக வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது.

உரையாடல் குறித்த உராய்தல்கள் - தாஜுக்கு மறுமொழி (5/10/07)

தமிழ்மண்ணில் இப்படி ஒரு தலைவரென வியப்படைந்தது தாஜ் மட்டுமல்ல , நானும்தான். வள்ளலாரும் வ.உ.சி.யும் காமராஜரும் ஜீவாவும் வாழ்ந்து ஆன்மீகத்திலும் அரசியலிலும் வளம் சேர்த்த தமிழ் மண்ணில், போயும் போயும் இப்படியும் ஒரு தலைவரா என என்னையும் வியக்க வைத்தவர்தான் ஈவேரா .

ஈவேரா- காந்தியடிகள் உரையாடல் - எழுப்பும் சில கேள்விகளும் வெளிப்படுத்தும் சில உண்மைகளும் (4/12/07)

சாதி எதிர்ப்பால் சாவு என்றால் ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், பாரதியார், நாராயண குரு, பூலே, அம்பேத்கார் என அத்தனை சீர்திருத்தவாதிகளும் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டிருக வேண்டும், அப்படி ஏதும் நடந்ததாக வரலாறு இல்லை. ராமசாமி நாயக்கர் கூட 60-வயதில் மகள் போன்ற ஒருத்தியை மணந்து 30 வருடங்களுக்கு மேல் இரண்டாம் மண வாழ்க்கை வாழ்ந்து 90- வயது தாண்டி இயற்கையாய்த்தான் இறந்தார்.

நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில் (4/5/07)


நாணயத்தின் மறுபக்கம் (3/29/07)

இந்த இடைக்கால ஐரோப்பாவின் கிறித்துவ சின்னத்தை, இஸ்லாமியருக்கெதிரான கிறித்துவத்தின் அன்றைய போர்ச்சின்னத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏன் தூசி தட்டி எடுத்து இந்திய நாணயத்தில் பொறிக்க வேண்டும்?

மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd) (2/1/07)

இவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக மாற்றங்களுக்கு இடம் தராமல் பிற்போக்கான மதச்சட்டங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளத் தொடங்கியது.

மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும் –1 (1/26/07)

எட்வர்ட் சைத் என்ற பாலஸ்தீனிய-அமெரிக்கர் ஓரியன்டலிஸம் என்ற வாதத்தை 1978-இல் முன்வைத்து பிரபலம் அடைந்த ஒரு தீவிர பாலஸ்தீனிய அனுதாபி மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர். பாலஸ்தீனியர்களுக்காகக் களப்பணி செய்து அண்மையில் மறைந்த இவர் பிறந்தது இஸ்ரேலுக்கு முந்தைய ஜெருசலேத்தில். வாழ்ந்து மறைந்தது அமெரிக்காவில்.

"மிஸ்டிக் இண்டியா"- ஓர் அபூர்வ அனுபவம் (1/11/07)


ஆண்பால் பெண்பாலுக்கு அப்பால்... (1/6/07)

விளையாட்டு மைதானங்களில்தான் பாலியல் சோதனைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்குக்காரணம் ஆண் தன்மை அதிகம் இருக்கும் பெண் வீராங்கனைகளுக்கு, உடற்கூறு, வலிமை ஆகியவற்றின் அடிப்படையில், பெண்களுக்கான விளையாட்டில் வெல்ல சாத்தியங்கள் அதிகம் என்பதுதான்.

ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் "ஆரிய" வாதம் (11/17/06)

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி கட்டிவைத்துப்போன ஆரிய திராவிட இனவாதக்கற்பிதத்திற்கும் ருவாண்டாவின் காலனீய வரலாற்றுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. நோவாவின் ஒரு மகன் ஹாம், டுட்ஸிகளின் மூதாதையென்றது போல், மற்றொரு மகன் ஜாபத் ஆரிய ஐரோப்பியருக்கு மூதாதை என்ற அடிப்படையில் ஆரியப்படையெடுப்பு என்ற கதை ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்டது. விவிலியத்தை வரலாறாக்கி ஜாபத்தைத் தோற்றுவாயாக்கி ஆரியப்படையெடுப்பு என்ற அண்டப்புளுகை இந்திய தொன்மை வரலாறாக அவிழ்த்து விட்டது ஐரோப்பியக் காலனீயம்.

இடதுசாரி இந்துத்துவம் (11/9/06)

கடந்த இரண்டு நூற்றாண்டுகளின் நிகழ்வுகளில் கம்யூனிசச்சாயம் வெளுத்துவிட உலக அளவில் இன்று அது தனது அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெருமளவில் இழந்து நிற்கிறது. புதிய அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் உலக அரங்குகளில் பல இடங்களில் பல விதங்களில் நடக்கின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவில் அது தனது வலதுசாரி பாரம்பரிய எதிரிகளான மதவாத அமைப்புகளுடன் சிறுபான்மை ஓட்டு அரசியலின் பொருட்டு வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொள்கிறது.

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?- 2 (10/19/06)

போப்பின் ஆதர்ச கிறித்துவ சமுதாயம் அமைய செய்ய வேண்டியது என்ன என்ற வரைபடம் இப்போது கிடைத்து விட்டது: முதல் வேலையாக சீர்திருத்தம் மற்றும் விழிப்புணர்வு காலங்களை கிறித்துவ வரலாற்றிலிருந்து நீக்கவேண்டும்; பின் சொந்த மண்ணின் கலாசாரங்களை விலக்கி, கிறித்துவ ஐரோப்பிய கலாசாரத்தைப் புகுத்த வேண்டும். இதனைச்செய்து, ஏசுவை ஒரே இறைவனின் ஒரே மகன் என்று ஆக்கி விட்டால் விட்டால் போதும்- போப்பின் ஆதர்ச கிறித்துவ சமுதாயம் அங்கு மலர்ந்து விடும். ஆனால் உண்மை என்னவென்றால், போப் சொல்லும் இம்மூன்று நிலைகளையும் கிறித்துவ வரலாற்றிலிருந்து நீக்கி விட்டால் அது மிகச்சரியாக நம்மை, வட்டிகன் அறிவுலகைத் தன் நுகத்தடியில் வைத்திருந்து மேற்கினை ஆண்ட 16-ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதுதான்.

பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம (10/12/06)

மேன்மையாளரே, பெருந்தகையோரே, மாண்புமிகுந்தோரே, மேதகு பெண்மக்களே, கனவான்களே, இப்பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வந்து இந்த மேடையில் சொற்பொழிவு தருவது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது. பிரெய்சிங்கர் ஹோக்ஷுவில் கழித்த மகிழ்ச்சியான காலத்திற்குப் பிறகு, பான் பல்கலைக்கழகத்தில் நான் கற்பிக்கத் தொடங்கிய அந்த வருடங்களை எண்ணிப்பார்க்கிறேன்.

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்? (9/28/06)

ஒருபுறம் விவிலிய கிறித்துவத்தை கிரேக்க காரண அறிவுடன் மணமுடித்து, ஐரோப்பிய காரண அறிவியலாளர்களுடன் சமரசம் காணல்; மறுபுறம், ஜிஹாத் (மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டதாக) இஸ்லாத்தினைக் காரண அறிவுக்கு முரணாகக் காட்டி அது கடவுளுக்கும் முரணானது எனப் புறம் தள்ளல்;

வந்தே மாதரம் படும் பாடு (8/24/06)

முஸ்லீம்களிலேயே கூட அனைவரும் இதற்கு எதிராகப் பேசுவதில்லை- இளைய மனங்களுக்கு வந்தே மாதரத்தைக் கொண்டு சேர்த்த இசைப்பணியில் ஏ.ஆர். ரஹ்மானின் பங்கை இங்கு நினைவில் கொள்வோம்.

கடிதம் (6/29/06)

இந்தி, இந்தியா, இந்தியன் என்ற கட்டுரையில் பலரது கருத்துக்களும் ஒரே கட்டுரையில் இடம் பெற்றிருப்பதால் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் ஒரே கட்டுரையில் இருப்பது படிப்பவருக்குக் குழப்பம் விளைவிக்கலாம்.

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ்- தொடரும் விவாதம் (6/20/10)

சார்த்தர் அண்ட் பூவாஹ் கூட்டத்தின் தத்துவங்கள் வேறு, சொந்த வாழ்க்கைத் தேர்வுகள் வேறு. நீங்கள் கூடதிக எளிமைப்படுத்தல் இருக்கும் கட்டுரை என்று எதைச் சொல்கிறீர்கள்? எந்தக் கட்டுரையை? கார்டியன் கட்டுரை ஒரு புத்தக விமர்சனம். புத்த்கத்தை எழுதியவர் இந்த ஜோடியின் வாழ்வில் நிறைய பேர் அவர்களது சுயமைய உளைச்சல்களால் பாதிக்கப்பட்டுப் பலியானார்கள் என்று சுட்டுகிறார். யானை நடந்தால் எறும்புகள் சாகத்தான் சாகும் என்ற வாதம் நமக்கு உதவுமா என்று யோசிக்கலாமே?


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.