|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " எச். பீர்முஹம்மது":
சூபி ஞானி பீர்முஹம்மது - ஓர் அறிமுகம் (10/10/03)
'ராமச்சந்திரனா என்றேன் ராமசந்திரன் என்றான் எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை நான் கூறவுமில்லை ' - நகுலன் பெயர் என்பதே ஒரு குறிப்பீடு சார்ந்தது. அருவமானது. தன்னை அறியமுடியாதது என்ற நகுலனின்
கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது - அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம் (3/28/08)
அரபு இலக்கியத்தின் மற்றொரு பங்களிப்பு நாடகமாகும். பல்வேறு நாடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைபாட்டை காட்சிப்படுத்துபவை. மனிதனின் எல்லாவித நெருக்கடிகளும் அதிலுண்டு. இவர்களில் எகிப்திய நாடகாசிரியரான லெனின் எல் ரெம்லே முக்கியமானவர்.அகஸ்தோபோவால் மாற்று அரங்கினை முன் வைப்பதற்கு முன்பே தன்னுடைய நாட்டில் அதனை செயல்படுத்தி காட்டியவர். இவரின் "அவர்கள் கழுதையை சுடுகிறார்கள்" "எல்லாம் நல்லது என்று நம்புவோம்", "ஆதாமும் ஏவாளும்" "நமக்கு ஒரு சித்திரம் தேவை" போன்ற நாடகங்கள் பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியவை. சில நேரங்களில் எகிப்திய அரசாங்கம் இவரின் நாடகங்களை தடை செய்திருக்கிறது.
எண்கள் நெடுவரிசையில் செல்கின்றன – கணிதமும் வரலாற்று அரபுலகமும் (6/28/07)
இந்தியாவிற்கு வந்த அல்-பெரூனி இந்திய சமூக கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்திய தத்துவ நூல்களான சாங்கியம் மற்றும் பதஞ்சலியை அரபியில் மொழி பெயர்த்தார். இந்தியா பற்றிய இவரின் நூல் இந்திய வரலாறு (கிதாபுல் ஹிந்த்) என்ற பெயரில் வெளிவந்தது. அல்பெரூனியின் 75 ஆண்டு காலம் பல்வேறு துறைகள் தொடர்பான தேடலாக அமைந்தது.
வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் - பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள் (1/18/07)
மனித செயல்பாட்டில் அறவியல் இருமையை பார்சி போதித்தது. நோன்பு என்பதை உடல் உறுதிபாடாகவும், ஆன்மாவின் பிரதிபலிப்பாகவும் பார்த்தது. மேலும் இது ஜைனத்தின் சுய-வருத்தல் கோட்பாட்டோடு தொடர்பு கொண்டது.
சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன - பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி (10/19/06)
சவூதியானது நபூத், நஜ்த், ஹிஜாஸ், ரப்-உல்-ஹாலி ஆகிய நான்கு பெரும் பாலைவனங்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் நஜ்த் நீங்கலாக மற்ற பகுதிகள் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. நஜ்த் பகுதி தற்போதைய ஆட்சி பரம்பரையான சவூத் குடும்பத்திடம் இருந்தது. இந்த தீபகற்பம் இங்குள்ள இனக்குழுக்களின் வேறுபட்ட வாழ்வனுபவத்திற்கு மூலாதாரமானதாகும். அவர்களின் வாழ்க்கை பாங்கு பாலைவனச்சூழலை எதிரொளிப்பதாக இருந்தது. இவர்கள் தண்ணீர் கிடைக்கும் பகுதிகளை நோக்கி நகர்ந்தார்கள். அப்பகுதியில் கூடாரமிட்டு தங்களுக்குதேவையானவற்றை உருவாக்கிக் கொண்டார்கள். இவர்களில் மற்றொரு பிரிவினர் ஒட்டக கூட்டங்களோடு நகர்ந்தார்கள். வேறு சிலர் தங்களுக்கு தேவையானவற்றை தேடி பல பகுதிகளுக்கும் நகர்ந்தார்கள். இவர்களுக்கென்று எவ்விதமான இலட்சிய உணர்வு இருக்கவில்லை. இவர்களே பதூயீன்கள். இந்த தீபகற்பத்தில் பேரீத்தப்பழ விவசாயம் பெருமளவில் இருந்தது. இதன் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள்.
சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்) (9/14/06)
பாஸ்மதி அரிசி பற்றி மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறாய். டில்டா என்ற பாஸ்மதி அரிசி ஒன்று இருக்கிறது. மின்சார அடுப்பில் வைத்தால் உன்னை போலவே ஐந்து நிமிடத்தில் சோறாகி விடுகிறது. நம்மை சோறாகத்தானே சமூகம் மாற்றியிருக்கிறது.
செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய (8/24/06)
புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை (8/11/06)
உலக வரலாற்றை நாம் நோக்கும் போது அது முழுவதுமே மனிதர்களின் இடம்பெயர்தலும், தப்பி அலைதலுமாக இருக்கிறது. ஹிட்லரின் கொடூரங்களுக்கு எதிரான யூதர்களின் இடப்பெயர்வு, யூதர்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வு, வேறுபட்ட போர்களின் விளைவான ஆப்கானியர்களின் இடப்பெயர்வு எல்லாமே ஒன்றை ஒன்று முந்தி கொள்கின்றன.
நேற்று வாழ்ந்தவரின் கனவு - பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது (3/4/05)
கனவின் எல்லை விரிவும் ஆழமும் மிக்கது. தனக்கான அலைதுடிப்புகளையும், தேடலையும் கொண்டது. விரிவான அர்த்தங்களின் தேடலே படைப்பின் உயிர்ப்புக்கு அடிப்படையாகிறது. கனவு வெளியில், அதன் எல்லையில் வறுமையை, தவிப்பை, அந்நியமாதலை பிரதிபலித்த உலகமானது பாவண்ணனுக்குர
அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள் (11/11/04)
நம் பார்வையிலிருந்து காட்சிகள் மறையும் வரையிலான உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடி பிரதிபலிக்கும் ஒளி தரையை தொட்டு எழும்பி நகர் முழுவதும் பரவி கிடக்கும் தத்ரூபம்.பேரீத்த பழங்களை விட நிரம்பி வழியும் மனித தலைகள். நான் பயணம் செய்த விமான
பேரீத்த பழங்கள் உதிர்ந்து விழுகின்றன (8/5/04)
பேரீத்தபழங்களின் பருவகாலம் தொடங்கி விட்டது. உச்சியை பிளக்கும் வெய்யிலின் உக்கிரத்தை உள்வாங்கி கொண்டு பழங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழுக்க தொடங்கி விட்டன. மரத்திலிருந்து கீழிறங்க துடிக்கும் பழங்கள், கீழிறங்கி நம்மவர்களின் பூட்ஸ் காலால் மிதிபடும் பழங்கள்
பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து (6/3/04)
மத்திய கிழக்கின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்திய கிழக்கைப்பற்றி எழுதுவது நல்ல அனுபவம் தான். வாழ்க்கை நம்மை சிலசமயங்களில் தவிர்க்க இயலாத படி தப்பிக்க வைத்து விடுகிறது. இன்றைய மிதக்கும் உலகில் நாம் மிதந்து கொண்டிருப்பது இயல்பானது. அவை நம்மை வெவ்வேறு திசை
திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும் (11/6/03)
முரண்பாடுகளின் உலகமாக நடப்பு உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் ஓட்டத்தில் இருந்து தனிமைப்படுதல் மேலும் உராய்வுகளையே உருவாக்ககூடிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கும் பயங்கரவாதம் என்ற சொல்லால் உலகமயமாக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்லாம் அதன் போக்கில் மீட்டுருவாக்கம் ெ
சிவ -சக்தி- அணு - காஷ்மீர் சைவம் பற்றி சில குறிப்புகள் (8/15/03)
சைவம் அதன் கோட்பாட்டு வடிவத்தில் பல கிளைகளாக பிாிந்தது. தென்னிந்திய சைவம், வட இந்திய சைவம், காஷ்மீர் சைவம் போன்றவை அதன் கிளைகள். சிவனை மையமாக கொண்டு இதன் கருத்துக்கள் நிலைபெற்றன. காஷ்மீர் சைவம் காஷ்மீர் பகுதியில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் ஏ
மதமும் தம்மமும் - மதம் குறித்த பெளத்த கோட்பாடு (5/10/03)
மதம் என்ற சொல்லாடல் முழுமுதல் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் அது பல்வேறு விதமான குறிப்பீட்டிற்குள் போய் நின்றிருக்கிறது. இயற்கையின் சார்பாக வாழ்ந்த ஆரம்ப கால மனிதனுக்கு மதம் என்ற சொல்லாடல் அறியப்படாதிருந்தது. அவனின் நனவிலி மனத்திற்குள் கூட அது வரவில்லை.
ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் - வளைகுடா அரசியலை முன் வைத்து (4/6/03)
ஈராக் மீது அமொிக்காவின் போர்தொகுப்பு நடவடிக்கையானது சர்வதேச அளவில் நவ. ஏகாதிபத்தியம் குறித்த புதிய புாிதல்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஏகாதிபத்தியம் தன்னளவில் ஓர் அதிகாரத்துவ அமைப்பாக இருக்கிறது. அமொிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாறு என்பது அதனால் தொடர்ச்சியான
மனிதனும் இருப்பும் - மறுபிறப்புப் பற்றி - சாாிபுத்திரருக்கும் மஹாகோத்திதருக்கும் இடையே நடந்த உரையாடல் (2/9/03)
மனித இருப்பு மற்றும் அதன் இயக்க நிலை குறித்து பெளத்தத்தின் கோட்பாடு விஸ்தாரமானது. மனிதன் இறந்த பின் என்னவாக மாறுகிறான் ? அவனின் இருப்பு என்ன ? உடல் என்பது என்ன ? புலன் செயல்பாடுகள் எதனை பொறுத்து அமைந்துள்ளன ? என்பதற்கான கேள்விகளுக்கு பெளத்தம் பதில் கண
அண்டங்காக்கைகளும் எலும்பு கூடுகளும் (பாபா பாீதின் சிந்தனைகள் குறித்து) (12/21/02)
என் உலர்ந்த உடல் எலும்புக்கூடாக ஆகி விட்டது என் கையின் குழிந்த பகுதிகளை அண்டங்காக்கைகள் அலகால் கொத்துகின்றன. இந்த வினாடி வரை கடவுள் எனக்கு உதவ வரவில்லை அவரது பணியாளனுக்கு நேர்ந்த அவலத்தைப் பார்த்தாயா, அண்டங்காக்கைகளே, நீங்
நிழல் பரப்பும் வெளி - நகுலனின் கவிதைகள் பற்றி (12/15/02)
தமிழின் நவீன காலகட்டத்து கவிஞர்களில் நகுலன் குறிப்பிடும் படியான இடத்தை பெறுகிறார். அவாின் கவிதைகள் தமிழ் கவிதை பரப்பிற்குள் மிதந்து செல்கின்றன. செறிவனான மொழி/ கோட்பாட்டு புனைவு/ இறுக்கம் தளர்ந்த அதிரூபமான வடிவம்/ ஊசி குத்தியது போன்ற சொல்லாடல்கள் இவற்
ராங்கேய ராகவின் படைப்புலகம் (11/24/02)
கடந்துபோன படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி மதிப்பீடு செய்வது ஒரு நேர்மையான செயல்பாடு. குறிப்பிட்ட கோட்டுத்துண்டில் அவன் நகர்ந்து சென்ற வேகம் ஏற்படுத்திய பாதிப்பு காலத்தை முன்னோக்கி நகர்த்த கூடியது. சிலாின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள்/ விமர்சனங்கள் அவன் க
ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்) (11/18/02)
சொல்லே உருவம் சொல்லே பூட்டு சொல்லே திறவுகோல் சொல்லே சாரம் சொல்லே அருவம் சொல்லே மந்திரம் சொற்களின் ஓங்காரமாக தத்துவ தாிசனத்தை நீட்டித்து சென்ற கபீர்தாசாின் சிந்தனையுலகமானது விாிவானதும் ஆழமானதுமாகும். இந்திய தத்துவ வரலாற
சிறைக்குள்ளிருந்து ஒரு கவிதை (ரஷ்ய கவிஞர் மூஸா ஜலீல் பற்றி) (10/27/02)
பெர்லினின் ரஷ்யா மீதான படையெடுப்பு/ அதன் கொடூரம் இவற்றின் ஒட்டுமொத்த சேர்கையாக ரஷ்யா/ மகத்தான அந்த அக்டோபர் புரட்சிக்குப்பிறகு நாடு சோசலிசத்தை தழுவிக்கொண்டிருக்கிறது. அந்த சூழலில் நாசிச ஜெர்மனியின் வெறித்தனமான தாக்குதல்களுக்கிடையே ஒரு கவிஞூனின் வா
எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து) (10/7/02)
'ஒன்றை வெளிப்படுத்தி கொள்ளும்போது இன்னொன்று மறைந்து கொள்கிறது ஒன்றை எழுதிக்கொள்ளும்போது இன்னொன்று எழுத முடியாததாகிறது முடிவுகளை எதிர்;பார்க்கும் போது குழப்பநிலையே எதிர்
காலத்தை பின்னோக்கும் நிழல் -சிாிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம் (9/24/02)
எப்பொழுதுமே பின்னோக்கும் நிழலுக்கு தனித்தன்மை உண்டு. எல்லாவித வாழ்வனுபவங்களும் ஒரே புள்ளியில் ஒன்று சேர வைத்து அடையாளத்தை நிறுவும் தன்மை அதற்குண்டு. வளைந்து நெளிந்து செல்லும் கடல். அதன் ஆர்ப்பாிக்கும் ஓசை தொடர்ச்சியாக/ முடிவற்றதாக ஒலித்து கொண்டிருக்கிற
கோடுகள் வளைந்து செல்கின்றன (ரமேஷ் : பிரேமின் சொல் என்றொரு சொல்லை முன் வைத்து.) (8/25/02)
வளைந்து செல்லும் கோடுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள தவறி விடுகிறோம். முடிவற்ற வெளியாய் விாிந்து செல்லும் அந்த கோடு தன்னை தாண்டி சலனித்து கொள்கின்றது. மரபு சார்ந்த தமிழ் கதை மரபு இன்னும் விாிவடையாமல் நேராக செல்கின்றது. உடைபடாத கண்ணாடி சில்லுகளாக ஒன்ை
லூயிபோர்ஹே - நித்திய கலைஞனின் கதை உலகம் (7/22/02)
அர்ஜென்டினா கலைஞனான லூயி போர்ஹேவின் கதை உலகமானது அகலமானது. லூயி போர்ஹே கதைகளின் தொகுப்பானது சமீபத்தில் பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளி வந்திருக்கிறது. பல்வேறுபட்ட பரந்த கதை வெளியில் போர்ஹே பிரகாசிக்கிறார். அல்ூமுட்டாசிம், எம்மா
யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும் (7/14/02)
லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி என்ற சிறுகதை தொகுப்பு, பெட்ரோ பாரமோ என்ற நாவல் இரண்டும் தமிழில் வெளி வந்திருக்கிறது. பெட்ரோ பராமோவின் காட்சி பதிவானது விரிந்து செல்கிறது. கோமல்லாவின் கிராமத்திற்கு தந்தையை தேடி
அடையாளம் கடக்கும் வெளி (6/29/02)
இந்திய அரசியல் சமூகத்தில் வகுப்புவாத கருத்தியல்கள் வேகமாக எழுச்சி பெற்று வருவதன் காரணமாக 'மொத்த சமூக அளவில் ' (Total Society Level) சிறுபான்மை / பெரும்பான்மை குறித்த கருத்தாக்கங்கள் வலுப்பெற்றுள்ளன. உண்மையில் அது சமூக எதார்த்தமாகவும் நடைமுறை ரீதியிலான
எஸ்.ராமகிருஷ்ணனின் 'வெயிலை கொண்டு வாருங்கள் ' ஒரு மதிப்பீடு (6/17/02)
தமிழ் இலக்கிய உலகம் இன்று நவீன காலகட்டத்தை தாண்டி தன்னை நகர்த்தி வருகிறது. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள் மிதந்து வருகின்றன. மிதத்தலின் போது நாம் அவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டியது இருக்கிறது. வெறுமனே சொல்லி விடக்கூடிய கதைகளும் உலாவந்து
அடையாள அரசியல் நெருக்கடிகள் - பாலஸ்தீனில் தொடங்கி . . . . . (6/10/02)
'அடையாளம் ஒன்று இருக்கும் போது நம்பிக்கை ஒன்று பிறந்து வருகிறது நம்பிக்கைகளற்ற அடையாளங்கள், அடையாளங்களற்ற நம்பிக்கைகள் தவிர எஞ்சுவது வேறொன்றுமில்லை நாம் நம்பிக்கையற்ற அடையாளத்துக்குள் இருக்கும் நாளே மகிழ்ச்சியானதாகும். ' வாழ்க்கையின் நம்பிக்கை, அடைய
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|