| |
தேடியதில் கிடைத்தவை
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " சின்னக்கருப்பன்":
தமிழக தேர்தல் கூட்டணி அலசல் (8/22/10)
சென்ற தேர்தலின் நிலையே இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அதாவது காங்கிரஸ்+திமுக ஒரு கூட்டணியாகவும், விஜயகாந்த் தனியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் நிற்கலாம். தற்போது நிராதரவாக உள்ள மற்றொரு கட்சியான பாமக எந்த அணியில் சேரும் என்று கணிக்க முடியவில்லை. பாமக தனியாக நிற்க தயங்குகிறது.
தாலிபானியத்தை வளர்க்கும் இந்தியா (8/17/10)
மேற்குவங்காளத்தின் முதல் இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஆலியா முஸ்லீம் யுனிவர்சிட்டியில் வங்காள மொழி விரிவுரையாளராக வேலை பெற்ற சிரின் மிட்டியா (Sirin Middya) கடந்த மார்ச்சிலிருந்து நூலகத்தில்தான் வேலை செய்கிறார். காரணம் அவர் புர்கா போட மறுத்ததுதான்.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, காஷ்மீர், பேராசிரியர் ஜோஸப்பின் கை (8/8/10)
பாரதீய ஜனதா கட்சி தற்போது தமிழகமெங்கும் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று போராடி வருகிறது. பொதுவாக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் நடத்தும் கூட்டங்களில் அந்த கூட்டத்தை நடத்தும் பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் கூட இருக்கமாட்டார்கள்.
அங்காடி தெரு காட்டும் கண்ணாடி (5/30/10)
அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான மனித வாழ்வை பற்றி பேசும் முதல் தமிழ்த் திரைப்பட்மாக இதைப் பார்க்கிறேன். இது தமிழின்
தூறல்கள் - லீனா மணிமேகலை, தலித்தியம் (5/2/10)
லீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது முனைந்து நின்று உதவியதை ஜெயமோகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஜெயமோகன் தனது நண்பர் மீது மிகவும் பிரியம் கொண்டவர். அந்த அன்பு இப்போது அவரது நண்பருக்கு உதவிய லீனா மணிமேகலை மீது இருக்கிறது.
ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும் (3/5/10)
சுவாமி நித்யானந்தர் பற்றிய ஒளிப்படங்களை சன் டிவி குழுமம் தனது சன் டிவியிலும், தினகரன் பத்திரிக்கையிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. நித்யானந்தர் எதிர்வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பாகிஸ்தான் என்ற நல்ல பக்கத்து வீட்டுக்காரன் (2/21/10)
எஸ்கே என்னும் என் இனிய நண்பர் ஒரு முறை சொன்னார். தன்னை உங்களுக்கு சமமானவனாக நினைத்துக்கொள்கிறவர் இழி நிலையில் இருந்தால் அவருக்கு உதவி செய்யமுடியாது. அது மட்டுமல்ல, நீங்கள் நல்ல நிலையில் இருப்பதே அவர் உங்கள் மீது தீராத பகையை கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் ஆகிவிடும். அதற்கு ஒரு நிகழ்ச்சியையும் சொன்னார்.
கலைஞர் தாக்கரே ஜெயராம் - இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும் (2/12/10)
'என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) மாதிரி இருப்பாள். அதைப்போய் எப்படி 'சைட்' அடிக்க முடியும்?'
நண்பர் ஷேக் தாவூதுக்கு பதில் (7/17/09)
மக்களிடையே மனிதநேயம் வளர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் ஷேக் தாவூது விபச்சாரிகளிடமும் திருடர்களிடமும் மனித நேயம் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. எல்லா விபச்சாரிகளும் விபச்சாரத்தை விரும்பி எடுத்துக்கொள்வதில்லை. திருடர்களும் திருடுவதற்காகவே திருடுவதில்லை.
ஓரின காதல் - வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம் (7/3/09)
ஓரினக்காதலை தண்டிக்கவேண்டிய குற்றம் என்ற சட்டம் என்று வரையறை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மனித உரிமைகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது.
ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது. (2/1/08)
ராஜன் குறையின் "இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்" என்ற கட்டுரையை முன்வைத்து
டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு (10/11/07)
நமக்கு தெரிந்தவரது திருமணம் என்றால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போய் நின்று தம்பதியினரை வாழ்த்தவேண்டும். அந்த நேரத்தில் திருமணம் செய்யும் தம்பதியினர் பார்வதி பரமேஸ்வரர்கள், ஸ்ரீராமர் சீதை, ஸ்ரீமுருகன் தெய்வானை, தெய்வாம்சமாக கருதி வாழ்த்தவேண்டும், வணங்கவேண்டும் என்றார்.
தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றதனம் (5/10/07)
மாறன் குடும்பத்தினருக்கும் கலைஞர் குடும்பத்தினருக்கும் இடையேயான பூசல் இன்று தெருக்களில் வெடிக்கிறது. வளர்த்த சன் டிவி மார்பில் பாய்கிறது என்று கலைஞர் புலம்பலாம். ஆனால், அது உண்மையாகத்தான் இருக்கும். ஆனால், அதனை விட உண்மையானது வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது.
மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல் (9/28/06)
பாகிஸ்தானின் உள்நாட்டு தொழில்கள் இந்தியாவின் மேன்மையான உற்பத்திப்பொருட்களால் அழிந்துவிடும் என்ற பயம் வெளிப்படையாக கூறப்பட்டாலும், உள்ளே இருப்பது ராணுவ மோனோபோலி கேபிடலிஸம் தனது மோனோபோலியை தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வமே என்பதை உணரலாம்.
வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி (9/1/06)
நரேந்திர மோடி மட்டுமே, "மதரசாக்களுக்கு வந்தே மாதரம் கட்டாயமல்ல" என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். மற்ற பாரதிய ஜனதா கட்சி முதலமைச்சர்கள், பாரதிய ஜனதாவின் தீவிரவாதப்பகுதியால் ஹைஜாக் செய்யப்பட்டு எல்லா பள்ளிகளிலும் கட்டாயம் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
குறைபட்ட என் பதில்கள் (8/31/06)
வரலாற்றிலிருந்து இரண்டுவிதமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று தன் கடந்த கால எதிரி உருவானதன் காரணத்தைப் புரிந்துகொள்வது. மற்றொன்று. அதன் மூலம் அப்படிப்பட்ட எதிரி எதிர்காலத்தில் உருவாகாமல் அவனை நண்பனாக்கிக்கொள்ள முனைவது.
திரு நேசகுமாருக்கு பதில் (8/10/06)
போர்முறைக்கும் கூட தர்மம் இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது குண்டு மழையை ஆகாய விமானத்திலிருந்து வீசும் இஸ்ரேலை எந்த இந்து ஆதரிக்க முடியும்? ஆயுதம் ஏந்தாத போர்வீரனோடு கூட போர் புரியாத தர்மமே இராமன் காட்டும் தர்மம். ஆயுதம் இழந்த இராவணனையும் இன்று போய் நாளை வா என்று அனுப்புகிறான் பெருந்தகை. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேலை ஆதரிக்க முடியும்?
மத்தியக்கிழக்குப் போரும் இந்தியாவும் (7/27/06)
இந்திய முஸ்லீம்கள் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுபவர்கள் இந்திய விரோதிகள்.
கண்ணகி-மரணதண்டனைக்கு எதிரான இளங்கோவடிகளின் குரல் (6/11/06)
குற்றம் செய்யாத ஒருவனை கொல்வதற்கு தண்டனை மரண தண்டனை என்றால், குற்றம் செய்யாத ஒருவனுக்கு அரசாங்கம் மரண தண்டனை வழங்குவது, அந்த அரசாங்கத்தை சட்டப்பூர்வமாக ஆக்கும் அனைவரும் ஒரு அப்பாவியை கொல்வதற்குத்தான் சமம்.
கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும் (6/1/06)
தமிழ்நாட்டில் இத்தனை மக்கள் தொகையில் இத்தனை சதவீத சிறுபான்மையினர் உள்ளனர். ஆகவே இருக்கும் கல்வி நிலையங்களில் இத்தனை சதவீதம் மட்டுமே சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் என்று இருக்கலாம் என்று அறிவிப்பு வர வேண்டும்.
உயர் கல்விக்கூடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு. (4/14/06)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதாவது பி.சி. அல்லது ஓ.பி.சி வகுப்பினருக்கு உயர் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை மனித வள மேம்பாடு அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்திருக்கிறார். வேலைகளிலும் கல்வி நிலையங்களிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்பட்ட வ
தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ? (1/6/06)
திமுக அணி, அதிமுக அணி என்ற இரண்டைத்தாண்டி எந்த ஒரு அணியும் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை பலமுறை இடைத்தேர்தல்களில் பல கட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன. எந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் அதில் அதிமுகவும் திமுகவுமே மோது
சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி) (12/16/05)
தமிழ்முரசு பத்திரிக்கையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளை வலைபோட்டு அமுக்கி உருட்டுக்கட்டையால் அடித்துக்கொல்லும் காட்சி ஒளிப்படமாக பிரசுரம் செய்திருந்தார்கள். இது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. பிரசுரம் செய
கடிதம் (10/14/05)
எனது சிறிய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களும், திரு சுந்தரமூர்த்தி அவர்களும் எழுதிய கடிதங்களுக்கு சிறிய பதில். திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் என் மீது எனக்கே இல்லாத அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார். அதற்கு நன்றி. மற்றபடி அவர் காட்டிய சுட்டிகளை நான்
கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் (9/30/05)
உழைக்கும் நடிகைகள் கூலி கேட்டால், அவர்களை விபச்சாரிகள் என்று தங்கர் பச்சான் சொன்னார். பிறகு மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார். மன்னிப்பு கோர வேண்டும் என்று குஷ்பு உட்பட்ட நடிகைகள் கேட்காமல் இருந்திருந்தால் அவர் மன்னிப்பு கேட்டிருந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
சுந்தர ராமசாமியின் 'பிள்ளை கெடுத்தாள் விளை ' - கதை பற்றிய என் எண்ணங்கள் (5/6/05)
சுந்தர ராமசாமி என்ற சிறந்த எழுத்தாளர் சமீபத்தில் எழுதிய அற்புதமான கதையை படித்தேன். மனதாழத்தில் அமுங்கிக் கிடக்கும் வன்முறையை சுந்தர ராமசாமி ஒவ்வொரு கதையாக வெளிக்காட்டுகிறாரோ என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆனால் அது சுந்தர ராமசாமியின் வன்முறை அல்ல. அது அவர்
தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் - சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன் (3/4/05)
வேலை காரணமாக திருச்சியிலிருந்து வெளியேறி, பல வருடங்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வசித்துவந்தேன். அது என் பார்வையை மாற்ற வெகுவாக உதவியது. அதுவரை திராவிட இயக்க ஆதரவாளனாகவும், பெரியார் விசிறியாகவும் இருந்த எனக்குள் ஒரு சில கேள்விகளை எழுப்பியது. வாட்டாள் நாகராஜ் எ
சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு (2/3/05)
** கடந்த 50 வருடங்களில் மிக அதிகமான கட்சித்தாவல்களையும் எதிர்கட்சி ஆட்சிகளை சட்டப்பூர்வமின்றி கவர்னர் மூலம் கலைப்பதையும் ஒரு கலையாக பயின்று வந்த காங்கிரஸ், இன்று கோவா அரசை கவிழ்த்து பிரதாப் சிங் ரானே அவர்களை முதல்வர் பதவியில் கவர்னர் துணையுடன் உட்காரவைத்த
கண்ணன் காலடியில் (2/3/05)
சென்னையிலிருந்து திருச்சி போகும் ரயிலில் என் நண்பருடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். நீண்ட பிரயாணம் நீண்ட பேச்சு. வழக்கம்போல, திராவிட இயக்கம், தமிழ்நாடு, தமிழ், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இன்ன பிற விஷயங்களில் பேச்சு சென்றது. என் நண்பர் தீவிரமான
சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள் (1/13/05)
தொட்டிக்குள் ஒன்றின் மீது மற்றொன்றாக இருந்த செங்கல்கள் நழுவி விழுந்ததில் தோன்றிய அலை நடுவிலிருந்து பரவி தொட்டி ஓரத்தில் சென்று கொண்டிருந்த எறும்புகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது போல, சுனாமி மனிதர்களை எறும்புகள் போல அலையடித்து அலைக்கழித்து அழித்திருக்கிறது. எறும்புகள் தங
சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்) (12/9/04)
யுக்ரேனில் தேர்தல். கலாட்டா, நீதிமன்றம், மறு தேர்தல் யுக்ரேன் என்ற நாடு முன்பு சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளில் ஒன்றாக சோவியத் நாட்டின் அங்கமாக இருந்தது. அப்புறம் அமெரிக்காவும், இன்ன இதர பிற கலகக்காரர்களும் ஆடிய ஆட்டத்தில் சோவியத் நாடு உடைந்து (இந்திய
ஜெயேந்திரர் கைது - ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம் (11/18/04)
இருபது வருடங்கள் என்ற நாவலின் முக்கியக் கதாபாத்திரமான டாக்டரை ஒரு ஜப்பானிய ராணுவ அதிகாரி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் சேரும்படி வேண்டுகோள் விடுப்பார். அதனை டாக்டர் மறுதலித்துவிடுவார். டாக்டர் பதில் கூறும்போது, பிரிட்டிஷாரை தான் எதிர்ப்பது உண்மையென்றாலும
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள் (10/14/04)
சமீபத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சரான யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து மாநில வேலைகளிலும் அளித்திருக்கிறார். இதனை எதிர்த்து வி ஹெச் பி , பாஜக போன்ற இந்துத்துவ தத்துவச் சார்
சென்ற வாரங்களில் அப்படி - அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி) (10/7/04)
** நைஜீரியாவில் நடக்கும் வேலை நிறுத்தம் மற்றும் மதக்கலவரங்களும், கொலம்பியாவில் நடக்கும் வன்முறையும், பெட்ரோலின் உலக நிர்ணய விலையை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பீப்பாய் கச்சா பெட்ரோலியம் 53 டாலர் அளவுக்கு ஏறி நிற்கிறது. இது உலகளாவிய பொருளாத
சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர், (9/30/04)
நான் பெரியாருக்கு வக்காலத்து வாங்குவது என்பது பலரால் எதிர்பார்க்கக்கூடியதாக இல்லாமல் இருந்தாலும் தோன்றியதை எழுதி விட வேண்டியிருக்கிறது. இந்த குறிப்பு திரு ரவிக்குமார் அவர்கள் காலச்சுவடு இதழில் 'திருமணம் என்ற கிரிமினல் குற்றம் ' என்ற தலைப்பில் எழுதியிருந்ததன் சம்ப
கடிதம் செப்டம்பர் 16,2004 (9/16/04)
அன்புநிறை நண்பர் பித்தனுக்கு, நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ் பாட்டில் அவர்களது அணுகுமுறையே என் விமர்சனத்துக்குக் காரணம
இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ (9/2/04)
*** தலைவர் கலைஞர் அவர்களது கேள்வி பதிலிலிருந்து. செய்தியாளர்: மணி சங்கர் அய்யரின் உருவப்பொம்மை மீது செருப்பால் அடிக்கும் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற பேரவைத்தலைவர் போன்றவர்களே கலந்து கொள்வதைப் பற்றி. கலைஞர்: அந்தப் போராட்டமுறை அநாகர
கிரிஸ்துவமும் பிரிட்டிஷாரும் சாதியமும் (7/29/04)
உயிர்மை ஜுலை மாத இதழில் வெளிவந்த 'அடித்தள மக்களின் எழுச்சியில் கிறிஸ்தவம் ' என்ற தலைப்பில் அ மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரையின் எதிர்வினையாகவும் தொடர்ந்தும் இந்தக் கட்டுரை. அமார்க்ஸின் முதல் வரியிலிருந்து அவரது மனச்சாய்வு வெளிப்படுகிறது. இந்தும
காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட் (7/15/04)
இந்தியப் பத்திரிக்கைகள் சிதம்பரத்தின் பட்ஜெட்டை ஏழைக்கான பட்ஜெட், காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட ஏழைகளுக்கு காங்கிரஸ் அளிக்கும் நன் கொடை என்று வானளவாகப் புகழ்கின்றன. எனக்கு ஆச்சரியமாக இல்லை. அதே நேரத்தில் ஏழைகளிலிருந்துதான் காங்கிரசுக்கு ஓட்டு வருகின்றது என்றால் அந
திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள் (7/1/04)
எஸ் வி ராஜதுரையில் வரிகளில் ' பி. யு. சி. எல். அமைப்பின் முதன்மையான நோக்கம் அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஜனநாயக, சிவில், மனித உரிமைகளைக் காப்பதாகும். உயிர் வாழும் உரிமை, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், குற்றங்கள் அனைத்தையும் முறைப்
தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை - என் கருத்துக்கள் (6/24/04)
கடந்த இரண்டு வாரங்களாக விகிதாச்சார தேர்தல் முறை பற்றிய கட்டுரைகள் திண்ணையில் வெளியாகியிருக்கின்றன. அவற்றை படித்துவிட்டு இந்தக் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். 'தோசையை திருப்பிப்போடு 'ம் தேர்தல் முடிவுகள் கடந்த பல தேர்தல்களில் பலரை
சென்ற வாரங்களில் 10-6-2004 (குற்ற மந்திரிகள், கட்டற்ற சோனியா, ரொனால்ட் ரீகன், டார்ஃபார் அவலம்) (6/10/04)
குற்றவாளி என்று நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுடன் இரண்டு முறை தேர்தல் கூட்டு ஏற்படுத்திக்கொண்ட பாரதிய ஜனதா கட்சி இன்று குற்ற மந்திரிகள் மத்திய அமைச்சரவையில் பதவி ஏற்றுக்கொண்டதை விமர்சித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி (6/3/04)
காஷ்மீர் தீவிரவாதிகளான ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதிகளால் 23ஆம் தேதி மே மாதம் 28 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அவரது குடும்பத்தினரான பெண்களும் குழந்தைகளும் வெடி வைத்துக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு என் அஞ்சலி. அவர்களது தியாகத்தாலும்
தேர்தல்களும் முடிவுகளும் எண்ணங்களும் (5/20/04)
*** டாக்டர் மன்மோகன் சிங் (உண்மையிலேயே பல்கலைக்கழகத்தில் படித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து மேலும் படிப்பறிந்தோர் அங்கீகரித்து கொடுத்த டாக்டர் பட்டம்) பிரதமராகிறார். வாழ்த்துக்கள். இதனை தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால், க
நா.இரா.குழலினி அவர்களுக்கு என் சிறு பதில் (4/8/04)
<** எனது கட்டுரை அரை மணி நேரத்தில் எழுதப்பட்டது. அதில் இவர் சொல்வது போன்ற உழைப்பெல்லாம் இல்லை. ஏதோ செய்நேர்த்தி இருப்பதாகச் சொல்வதற்கு நன்றி. மனதில் உள்ளதுதான் என் எழுத்தில் வருகிறது. பொய் எழுதுவது என்றால் தான் மிகவும் யோசிக்க வேண்டும். ஒரு கட்டுரையை எழுதும்
பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ? (3/18/04)
சமாச்சார் இணையத்தளத்தில் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கட்டுரையைப் படித்தேன். நல்ல கட்டுரை. கடைசிக்கு சற்றே முந்திய வரியைத் தவிர. http://samachar.com/tamil/features/110304-Ipa.html இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துக்களில்.. 'அங்கை
தேசபக்தியின் தேவை (2/12/04)
சிறந்த நாவலாசிரியரும், நாடகாசிரியருமான இந்திரா பார்த்தசாரதி அவர்களும், சிறந்த நாவலாசிரியரான பி ஏ கிருஷ்ணன் அவர்களும் சமாச்சார் தளத்தில் தேசபக்தி பற்றி எழுதியிருக்கிறார்கள். http://samachar.com/tamil/features/030204-Ipa.html http://samach
சென்ற வாரங்கள் அப்படி... (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்) (1/29/04)
** பரிசோதனை கவலை தரக்கூடிய சில விஷயங்களை பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் படிக்கும்போது அவற்றைப் பற்றிய பொதுக்கருத்துக்களையும் விவாதங்களையும் எழுப்புவது அவசியம் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்தி, இந்தியாவின் மருத்துவத்துறை தவறான விஷயங்க
இந்த வாரம் இப்படி (xenophobic நான், பாபி ஜிண்டால், ஈராக்கில் இத்தாலி வீரர்கள், அறம்) (11/20/03)
xenophobic ஆக இல்லாமல் இருப்பது என்னை பலர் பரந்த மனம் கொண்டவன் என்று சொல்ல உதவக் கூடும். என்னை மற்றவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நான் மனதில் தோன்றியதை எழுதாமல் விட்டேன் என்றால், நான் எனக்கே துரோகம் செய்கிறேன் என்றே கூற வேண்டும், சோனியா ஏ
சென்றவாரங்களின் குறிப்புகள் - நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை) (11/13/03)
*** ரம்ஸ்ஃபீல்டின் ஒப்புதல் வாக்குமூலம் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் எனக்கு மிகவும் 'பிடித்தமான ' அரசியல்வாதியாக ஆகிவருகிறார். சமீபத்தில் (அவரே கசிய விட்டதாக கூறப்படும்) கடிதத்தில் ஈராக்கில் அமெரிக்க மறு நிர்மாணத்தின் முயற்சிகளின் முன்னேற்றம்
யூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம் (10/10/03)
** 'அம்மா ' அருள்பாலித்து எல்லோரும் கடா வெட்டாமல் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டுத்தான் சாமி கும்பிட வேண்டும் என்று திருவாக்கும் கூடவே போலீசுக்கு ஆளை உள்ளே தள்ள அனுமதிவாக்கும் அளித்திருக்கிறார். 'தீ மிதிப்பதை ' காட்டுமிராண்டித்தனம் என்றும், குங்குமம
சோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து (9/18/03)
சமீபத்தில் காண்கனில் நடந்த WTO பேச்சுவார்த்தைகளை திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருண் ஜெட்லி இந்தியாவின் விவசாயிகளின் எதிர்காலத்தையும், இன்னும் கோடிக்கணக்கான ஏழை நாடுகளின் விவசாயிகளின் எதிர்காலத்தையும் கவிழ்த்துவிடுவாரோ என்று பயமில்லை. நான் எதிர்ப
ராமர் காட்டும் ராமராஜ்யம் (8/22/03)
மாலன் தான் எழுத என்று 'வலைக்குறிப்புகள் ' வைத்திருக்கிறார். அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன. 'உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ' ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது
பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும். (8/9/03)
பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையைப் போல ஒரு பெரிய ஆணாதிக்கச் சிந்தனை இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வரதட்சிணையை எதிர்த்து பேசுபவர்கள் எல்லோரும் பொலிடிகலி கரெக்ட் ஆன ஆசாமியாக ஆகிவிடுகிறார்கள். மேடையில் உரத்து முழக்கமிடும் பெண்களாயினும் சர
அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும் (7/24/03)
சமீபத்தில் அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோதும், அதன் பின்னர் ஜெயலலிதா அரசு அவர்கள் மீது எடுத்த அடாவடி நடவடிக்கைகள் போதும், பல எழுத்தாளர்களும், பல பத்திரிக்கைகளும், ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாட்டைக் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை) (7/24/03)
தீவிரவாதிகளா அல்லது பயங்கரவாதிகளா ? ஜூலை 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தி இந்து பத்திரிக்கை, வைஷ்ணோதேவி கோவிலுக்குச் சென்ற ஏழு யாத்ரிகர்கள் (ஒரு குழந்தையும் கொல்லப்பட்டிருக்கிறது) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை எழுதியிருக்கும் செய்தியை பாருங்கள்.
பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து (6/19/03)
உலகமகா மடையர்கள் தான் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசுவார்கள். அப்படிப்பட்ட மடையர்கள் இன்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பழமொழி சொல்வார்கள். கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கறவனுக்கு மதி எங்க போச்சி என்று. பாகிஸ்தானிய ரா
இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு (6/19/03)
அமெரிக்கா வற்புறுத்துகிறது. இந்தியா தாக்காட்டுகிறது. முடியாது என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லவும் இல்லை. செய்கிறேன் என்று உறுதி கூறவும் இல்லை. அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா ஈராக்குக்கு ராணுவத்துருப்புக்களை அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறது என்று கருதுகிறேன்.
என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும் (5/30/03)
என்னுடைய எழுத்து சாராம்சவாதம் (essentialism) என்று தலைப்பிட்டுவிட்டு, அது குப்பை என்று ஒதுக்கிவிட்டால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. உண்மையில் ரவி ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும் புத்தகங்களில் சிலவற்றைத்தவிர மற்றவற்றை நான் படிக்கவில்லை. படிக்காதது எனக்கு நஷ்டம் என்ற கருத்தும் எனக்
இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்) (3/9/03)
ஜெயலலிதாவின் வெற்றி 40 சதவீதத்துக்கும் மேற்பட்டு கிரிஸ்தவர்கள் வாழும் சாத்தன்குளத்தில் (சாத்தான்குளம் தேவன்குளம் இன்ன வகையறா இல்லை. சீத்தலை சாத்தனார் மாதிரியான ஒரு சாத்தன் வெட்டிய குளம்) ஜெயலலிதாவின் வெற்றி பலருக்கும் இன்னும் புரிபடாமல் இருக்கிறது. எல்லா ச
இந்தவாரம் இப்படி பெப்ரவரி 16 (காதலர் தினம், உலகமயமாகும் அரசியல் ) (2/15/03)
காதலர் தின கூத்துக்கள் இந்தியாவில் காதலர் தினம் என்று ஒன்று உண்டால் அது வசந்த உற்சவம் தான் என்று நினைக்கிறேன். மணிமேகலையிலும், நைடதத்திலும் வரும் வசந்த உற்சவ கொண்டாட்டங்களைப் பார்த்தால், இன்று நடக்கும் காதலர் தின கொண்டாட்டங்கள் பல் குத்தக் கூட போதுமா
அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை (2/9/03)
இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர் எரிபொருள் தருகிறேன் என்று சொன்னாலும், அதை
அணுசக்தியை இந்தியாவின் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை (2/9/03)
இந்தியாவின் வளரும் பொருளாதாரத்துக்கு இன்றியமையாத ஒரு தேவை, குறைந்த விலையில் நிறைய கிடைக்கும் எரிபொருள் அல்லது மின்சாரம். அதற்காக பல மேலை நாடுகள் போருக்குக்கூட தயாராக இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவுக்கு பலர் எரிபொருள் தருகிறேன் என்று சொன்னாலும், அதை
உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும் (1/25/03)
இளமுருகு எழுதிய கட்டுரைக்கு நன்றி சொல்லவேண்டும். அது பலரைப் பேச வைத்திருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பர் இது பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூரில் போடும் அபராதம் போல தமிழ்நாட்டிலும் போட்டால் எல்லாம் ஒழுங்காக சென்னையை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று
இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார (1/19/03)
சாலமன் பாப்பையா ஆண்களும் பெண்களும் சினேகிதர்களாக இருக்கலாமா கூடாதா என்ற பட்டிமன்றம் சாலமன் பாப்பையா தலைமையில் சன் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஸன் தொலைக்காட்சியில் ஒரே உருப்படியான பொங்கல் நிகழ்ச்சி அதுதான். (கமல் பேட்டி அல்ல)
இந்த வாரம் இப்படி (ஜனவரி 12, 2003) விவசாயிகளுக்கு மதிய உணவு, பிரவாசி பாரதிய திவஸ், அக்னிப் பரிட்சை (1/12/03)
*** மதிய உணவுக் கூடங்களில் விவசாயிகளுக்கு உணவு தமிழ்நாட்டுக்கே சோறு போட்ட தஞ்சையில் சில விவசாயிகளின் தற்கொலைக்குப் பின்னர், தமிழக அரசு மதிய உணவு திட்டத்தை விவசாயிகளுக்கு நீட்டிக்கிற செய்தி கேட்டு இரண்டு விஷயம் தோன்றியது. முதலாவது, இந்தப் பி
இந்த வாரம் இப்படி (ஜனவரி, 4, 2003) (இந்தப் பகுதி பற்றி, பர்தா கொலைகள், திராவிடத்வா) (1/4/03)
முதலாவது, இந்த பகுதி ஏன் வெளிவருகிறது என்பது பற்றி. இந்த பகுதி எழுத ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே, ஓரளவுக்காவது திண்ணையில் அந்த வார நிகழ்ச்சிகள் பற்றி விவாதத்தையோ, கருத்துக்களையோ எழுத வேண்டும் என்பதுதான். ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி, வெகுகாலம்
இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 30, 2002) விவசாய வருமானத்துக்கு வருமான வரி, உலக நீதிமன்றம் (12/30/02)
விவசாய வருமானத்துக்கு வருமான வரி கேல்கர் ஆலோசனைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால்தான் அவர்கள் வருமான வரி கட்டவேண்டும் என்ற விஷயத்தோடு, விவசாய வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்ற விஷயமும் வெளிவந்துள்ளது.
இந்த வாரம் இப்படி - டிஸம்பர் 15, 2002 ( மோடிவித்தை, நாகப்பா கொலை) (12/15/02)
மோடிவித்தை எனக்கு இந்த தேர்தல் முடிவுகளுக்கு முன்னால், நான் 300 பேரை சந்தித்து என்ன வரப்போகிறது என்று சொல்கிறேன் என்று ஆரம்பித்த எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டுவிட்டு, நான் கருணாநிதிக்குத்தான் போடுகி
தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!! (12/7/02)
சென்ற நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோது, காவிரித் தண்ணீர் ஒப்பந்தம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக எழுதப்பட்டது . அப்போது மைசூர் சமஸ்தானத்தில் இருந்த மைசூர் ராஜாவை தலையில் தட்டி வெள்ளையர்கள் எழுதிய காவிரி நதி நீர்ப் பங்கீடு மிகவும் தமிழகத்துக்கு சாதகமானது. அப்போது தமிழ
இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்) (12/1/02)
எய்ட்ஸ் தினம் இந்தவாரத்து ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டு உலகளாவிய முறையில் அதனை பிரபலப்படுத்தி, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் எய்ட்ஸ் சமூகசேவையாளர்களை போலீஸார் அவமானப்படுத்துவது நிற்பதில்ை
தலித்துகள், இந்து மதம், மதமாற்றம் (10/27/02)
என்னைத் திட்டி வந்த கடிதங்களின் காட்டத்தால் கொஞ்சகாலம் தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு பலருக்கு நிம்மதி தரலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிய அவசரச் சட்டம் என்னை மீண்டும் கணிப்பொறிக்கு இழுத்துவந்துவிட்டது. மனம் நோக விருப்பம் இல்லாதவர்கள
குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை (9/9/02)
சமீபத்தில் இந்து பத்திரிக்கையிலிருந்து குமுதம் ரிப்போர்ட்டர், ஜ்ஊனியர் விகடன் வரை, மேலே இந்திய மனித உரிமைக் கமிஷனிலிருந்து இங்கே சமூக சேவகர்கள் வரை எல்லோரும் கண்டித்த ஒரு விஷயம் பேரையூர் முத்துக்குழிஅம்மன் கோவிலில் நடந்த குழந்தைகளைப் புதைத்து எடுக்கும் குழிமாற்றுத்
ரோஸா வசந்த் அவர்களுக்கு பதில் (8/25/02)
எங்கள் கோவில்களில் கோழி, ஆடு பலி கொடுத்துக்கொண்டிருக்கிறோமே. எதற்காக என்று நினைக்கிறீர்கள் ? இதனை எதிர்ப்பது யார் என்று பார்த்தால், மேற்கு படிப்பு படித்த மெத்த மேதாவிகள்தான். ராமன் குகன் கொண்டுவந்த மீன்களை சாப்பிட்டான். உங்கள் வீட்டுக்குள் என்ன பேசுகிற
பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் (8/19/02)
1947இல் இந்தியா பிரிக்கப்பட்டபோது, இந்தியாவிலிருந்து ஏராளமான பிகார் மாநில முஸ்லீம்கள் அருகாமையிலிருந்த வங்காள, கிழக்குப் பாகிஸ்தானுக்குச் சென்றார்கள். அவர்கள் பேசும் மொழி பிகாரில் முஸ்லீம்கள் பேசும் உருது மொழி. வங்காள மொழி பேசும் வங்காளத்தில் அவர்கள்
சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம் (8/5/02)
கடவுளை மறுத்தவன் நாள்தோறும் கூறீனானே நாத்திகம் பகுத்தறிவாளனின் நெஞ்சினிலே பூத்ததென்ன ஆத்திகம் திருமகன் வருகிறான் திருநீறை நெற்றி மீது தினம் பூசி அதிசயம் அதிசயம் பெரியார்தாந் ஆனதென்ன ராஜாஜி தனதன்புத் தாயை கைதொழும் பாபா தான் சிந
அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது (6/23/02)
ரஃபீக் ஜக்கரியா என்ற காங்கிரஸ் தலைவர், இஸ்லாமிய படிப்பாளி . காங்கிரஸ்காரர். முக்கியமான அறிவு ஜீவி. ஆஸியன் ஏஜ் பத்திரிக்கையில் அப்துல் கலாம் முஸ்லீமே அல்ல என்று கட்டுரை எழுதியிருக்கிறார். ( இவரது புதல்வர் பரீத் ஜக்கரியா, அமெரிக்க பத்திரிக்கையான நியூஸ்வீக் என்ற
கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது (3/30/02)
வெகுகாலத்துக்கு முன்னர் திராவிடர் கழகம் ஒரு வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தது. அரசு அலுவலகங்களில் இந்து, கிரிஸ்தவ, முஸ்லீம் மதங்கள் சார்ந்த பிம்பங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு சில அலுவலகங்களில் இருக்கின்றன. அவைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரி தி.க நீதி ம
கமலஹாசன், குடும்பம், நீதிமன்றம், அரசாங்கம் (3/17/02)
கமலஹாசனும் அவரது மனைவியும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதை குமுதத்தில் படித்தேன். விவகாரம் இங்கு கமலஹாசனைப் பற்றியதல்ல. அவரது குடும்பத்தைப் பற்றியதும் அல்ல. கமலஹாசனின் வாழ்க்கை அவரது பிரச்னை. ஆனால், ஒரு சமூகத்தில் இருக்கும் கமலஹாசனை எவ்வாறு சமூகமும், நீதி மன்றமு
இந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல். (12/15/01)
இந்த செய்தியை என் நண்பனிடம் சொன்னபோது, அவன், 'பாவம். யாரோ போலீஸ்காரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். எவனாவது ஒரு எம்பி செத்துபோயிருந்தால் பரவாயில்லை ' என்றான். நமது சினிமாக்களிலும், நமது நாவல்களிலும், நமது நடைமுறைப் பேச்சுவார்த்தைகளிலும், துக்ளக் ே
வளர்ந்த அமெரிக்கா, வளரும் இந்தியா (11/18/01)
இனிமே காபூல் நகரத்தில் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை. தாலிபான் காபூல் நகரத்தை விட்டு ஓடும் போது ஒரே ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. ஆஃப்கானியர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். வெகுகாலம் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டிருந்த இந்த நகரத்தில் கொண்டாட்டம
ஜோதிடம் கல்லூரிகளில் சொல்லித்தருவதில் தவறில்லை. (7/29/01)
இது தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றல்ல. இருப்பினும் இது சமீபத்தில் மிகவும் முக்கியமானப் பிரச்னைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. முக்கியமாக சமீபத்தில் படித்த நல்ல புத்தகங்களில் ஒன்று, கல்வி பற்றி வசந்திதேவி - சுந்தரராமசாமி சந்திப்பு பற்றி வெளிவந்த புத்தகம்.
தமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் ? (6/10/01)
நம் ஊரில் இருக்கும் ஒரு வாக்காளரிடம் கேட்டால் அவர் தெளிவாக 'நான் கருணாநிதிக்கு ஓட்டுப்போட்டேன் ' என்றோ 'நான் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டேன் ' என்றோ, 'ராமதாஸ் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச்சொன்னார், நான் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டேன் ' என்றோ சொல்வ
இந்துக்கள் மஞ்சள் முண்டாசு அணியச்சொல்லும் தாலிபான் உத்தரவு சரிதான். (5/27/01)
தாலிபான் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை பெரும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. இந்துக்கள் மஞ்சள் துண்டு அல்லது மஞ்சள் முண்டாசு கட்டியிருக்க வேண்டும் என்று தாலிபான் ஆணையிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினரும் தனி அடையாளத்துடன் செல்லவேண்டும் என்ப
வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை (4/15/01)
ஏப்ரல் 14ஆம் தேதியன்று மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்னும் எம்சிசி அமைப்பு சுமார் 14 மனிதர்களை புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கெண்ட் மாநிலத்தில் கொன்றிருக்கிறது. இது காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகளிலோ, அல்லது இடதுசாரி கட்சிகளிலோ, அல்லது நடுவாந்த
வன்முறை பற்றிய கட்டமைக்காத கட்டுரை (4/15/01)
ஏப்ரல் 14ஆம் தேதியன்று மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் என்னும் எம்சிசி அமைப்பு சுமார் 14 மனிதர்களை புதிதாக உருவாக்கப்பட்ட ஜார்க்கெண்ட் மாநிலத்தில் கொன்றிருக்கிறது. இது காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகளிலோ, அல்லது இடதுசாரி கட்சிகளிலோ, அல்லது நடுவாந்த
உருவ வழிபாடுதான் சரியான வழிபாடு (3/25/01)
முதலாவது கேள்வி - இந்த கட்டுரை தேவையா ? என்பது. சமீபத்தில் இந்த பாமியான் சிலை உடைப்பின் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்து, எக்ஸ்பிரஸ், ரீடிஃப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகளில் முஸ்லீம்களும் மற்றவர்களும் எழுதிய கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. முக்
வாய்பாயி பதவி இறங்க வேண்டும். (3/18/01)
தெஹல்கா என்ற மின்வலைப்பக்கத்தில் பாதுகாப்பு சம்பந்தமான பொருள்களை வாங்குவதிலும் விற்பதிலும் கமிஷன் பல்வேறு நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை பரபரப்பாக வெளியிட்டு பல மந்திரிகளின், அரசியல்வாதிகளை தலைகளை உருட்டியிருக்கிறார்கள். வாழ்த்துவது தவிர வேறு என்ன ?
தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான் (3/4/01)
முன்னுரை: திண்ணை ஆசிரியராகப்பட்டவர் மஞ்சுளா நவநீதன் அவர்களைக் கூப்பிட்டு, தலிபன் செய்யும் பாமியான் புத்தச் சிலை உடைப்பைப் பற்றி எழுதச்சொன்னார் (எனக்கு முன்னாலேயே). பிறகு என்னிடம் திரும்பி இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரும் வழக்கம்போல தாலிபான் செய்வது
இந்தவாரம் இப்படி - ஜனவரி 15 2001 (1/15/01)
** பொங்கல் நல்வாழ்த்துக்கள் பொங்கல் விழாவாவது அரசியலாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழர்களின் கடமை. இதைத் தமிழர் திருவிழா என்று திராவிட இயக்கப்படுத்த ஆரம்பகால திராவிட இயக்கத்தினர் முயன்றார்கள். ஆனால் இன்று தமிழ்நாட்டுப் பொங்கலும், வடநாட்டு மகர
இந்த வாரம் இப்படி (ஜனவரி 1 2001) (1/1/01)
** எல்லாவற்றுக்கும் முந்தி , 'புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் '. உண்மையான புத்தாயிரமாண்டு (millenium) நல் வாழ்த்துகளும் கூட. ஒரு பழைய பாடல் 'ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம், அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சு
மெல்லத் தமிழ் இனிச் சாகும் (12/17/00)
தமிழ் சாகுமா ? சாகும். தமிழ் சாகா வரம் பெற்றுக் கொண்டு பிறப்பெடுக்கவில்லை. தமிழ் ஒரு மொழி. எத்தனையோ மொழிகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. இன்றும் மொழிகள் வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. தமிழ் ஒரு மொழி. தமிழ் பேச ஆட்கள் இல்லை எனில் தமிழும் சாகும்.
இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 10, 2000) (12/10/00)
மீண்டும் பாபர் மசூதிப் பிரச்னை வாய்பாயி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் ஆறாம்தேதி நடக்கும் திருவிழா இது. இந்த வருடம், வாஜ்பாயியை வாயைத்திறக்கவைத்து அ
அமெரிக்க அரசியலில் குளறுபடியா ? (11/12/00)
எல்லோரும் அமெரிக்காவை இன்று ஆச்சரியமாகப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்துக்கே ஜனநாயகம், சுதந்திரம், பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் ஆளும் நாடு என்று பிரகடனம் பண்ணிக்கொண்டிருந்த அமெரிக்காவில் இன்று தேர்தல் முறைகேடுகள் என்றும் திருட்டுத்தனம் என்றும
இந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000 (11/4/00)
நார்வேஜியன் தூதுவர் பிரபாகரன் சந்திப்பு தூரத்தில், வெகு தூரத்தில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் இதனால் தெரிகிறது. தமிழ் மக்களின் ஈழக்கனவு இதனால் நிறைவேறினால் மகிழ்ச்சி. அந்தப் பகுதி குழந்தைகள் மீண்டும் குழந்தைகளாக வலம் வருவார்களா ? வன்முறை குறையுமா ? அ
இந்த வாரம் இப்படி (10/22/00)
மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சியா ? மார்க்ஸிஸ்ட் கட்சி பிராந்தியக் கட்சி என்று தேர்தல் கமிஷனால் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது. உடனே பலரும் இதைக் கண்டனம் செய்திருக்கிறார்கள். மார்க்ஸிஸ்ட் கட்சி இந்தப் போக்கைக் கண்டித்து இருக்கிறது. இந்த அங்கீக
இந்த வாரம் இப்படி - அக்டோபர் 9, 2000 (10/8/00)
ஜஸ்வந்த சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் சொன்னது உண்மையா ? சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் ஆச்சரியமானதும் வருந்தத்தக்கதுமான ஒரு விஷயத்தைச்
இந்த வாரம் இப்படி அக்டோபர் 2, 2000 (10/1/00)
** காந்தி பிறந்த நாள், அக்டோபர் 2 கிருஷ்ண ஜெயந்தி, கிரிஸ்துமஸ், புத்த ஜெயந்தி, போன்று பழங்காலத்தில் மதரீதியான பிறந்த நாள்கள் கொண்டாடப்பட்டன; படுகின்றன. நவீன காலத்தில் மத சம்பந்தமில்லாத அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் இன்று இந்தியாவில்
இந்த வாரம் இப்படி - செப்டெம்பர் 23, 2000 (9/24/00)
*** மத்தியில் மார்க்ஸிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரும் புரட்சி நடக்க இருக்கிறது. அதாவது ஜோதி பாசு அவர்கள் கேரளாவிலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சி இனிமேல் மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்
தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா ? (8/19/00)
ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற இந்திய மாநிலங்கள் நேருவின் காலத்தில் முதல் மொழி வாரி மாநிலங்களாக பிரிந்தன. அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் இந்தியாவெங்கும் இருந்த வேண்டுகோளும் முக்கியமாக ஆந்திரத்தில் பொட்டி ஸ்ரீராமுலுவும். அதன்போது சென்னை மாகாணமாக இருந
காஷ்மீர் சுயாட்சியும், ஒதுக்கப்படும் முஸ்லீம்களும் (7/23/00)
சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டசபை சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது 1953க்கு முன்பு காஷ்மீருக்கு இருந்த அதிகாரங்களை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசை வற்புறுத்துகிறது. இந்த கோரிக்கை மூலம் புது தில்லியில் இருப்பது போன்று காஷ்மீரிலும் ஜனாதிபதி, பிரதம மந்திர
இந்தியனாக இருப்பது குற்றமா ? (6/20/00)
பிஜித்தீவுப் பிரச்னை இன்று பெரிதும் பேசப்பட்டுவருகிறது. உலகத்தில் ஆங்கில காலனியாதிக்கம் காரணமாக விளைந்த பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஒருபுறம் அமெரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சி அங்கிருந்த செவ்விந்தியர்களை வியாதிக் கிருமிகள் தோய்த்த போர்வைகளையும், இன்னும் பல இனப்படுெ
இறந்த கிரிக்கெட் எப்போது உயிர்பெறும் ? (6/18/00)
சென்ற மாதம் ஒரு அதிகாலை, ஒரு இன்டெர்நெட் முகவரியில் கிரிக்கெட் இறந்து போனது. மனோஜ் பிரபாகர் மற்ற கிரிக்கெட் 'வீரர் 'களுடன் பேசிய ஒலிநாடாக்களை வெளியிட்டு எல்லா கிரிக்கெட் 'வீரர் 'களின் மானத்தையும் வாங்கிவிட்டார். பிறகு நடந்தது அனைவருக்
இலங்கைப்போர். (5/7/00)
இலங்கையில் மீண்டும் தீவிரப்போர் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இது பற்றி பேசவே அஞ்சும்படியான சூழ்நிலையை இருபுறமும் உருவாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசு போர்பிரகடணம் செய்து, வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுப் பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும்சரி யார
இந்திய தண்ணீர் வறட்சியும், அறிவு வறட்சியும் (4/30/00)
சமீபத்தில் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்துள்ளன. இது பற்றி வழக்கம் போல தமிழ்ப் பத்திரிக்கைகள் ( ஏன் அனைத்து இந்தியப் பத்திரிக்கைகளும் தான்) உதாசீனம் செய்துவிட்டன. முதலாவது விஷயம் திரிபுராவில் நடந்தது. இங்கு இருக்கும் தீவிரவாதிகள் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இ
திருவள்ளுவரும் திராவிட அரசியலும் (3/20/00)
இரண்டு வாரங்களாக திண்ணையில் நடந்த திருவள்ளுவர் விவாதத்தை ஆர்வமாக படித்து வந்தேன் . திடாரென்று அது சம்பந்தமான கடிதங்கள் நின்று விட்டன. கட்ட பொம்முவின் கடிதத்துக்கு நிச்சயமாக பதில் எழுதி இருப்பார்கள் என்று நம்பி ஆசிரியரிடம் கேட்டேன் என்னவாயிற்று என்று. வெட்டியாக
ப.சிதம்பரத்துக்கு ஒரு யோசனை (2/28/00)
தமிழ்நாட்டில் மூப்பனார் ஆதரவு கொடுத்தும் ஜெயலலிதாவின் கட்சி தோற்றிருக்கிறது. இது மூப்பனார் தமிழ்நாட்டில் முழுவதுமாக காலாவதியானதையும், ஜெயலலிதாவின் கட்சி வெறியாட்டம் ஆடிய பின்னரும், தமிழ் மக்கள் ஜெயலலிதாவின் பின்னால் நிற்பதையும்தான் குறிப்பிடுகிறது. திமுக கூட்டணி மூன்று இடங
வாஜ்பாயியின் சவடாலும், வாட்டர் பற்றிய வரட்டுவாதமும் (2/21/00)
முதலில் வாஜ்பாய். சமீபத்தில் அவர் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் 'பாகிஸ்தான் தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை திருப்பிக் கொடுத்தபின்னரே எந்த பேச்சு வார்த்தையும் ' என்று வாய்ச்சவடால் அடித்திருக்கிறார். இதே வாஜ்பாய் சில மாதங்களுக்கு முன், பாகிஸ்தானுடன் பேச்சு வார்த
அன்று ஜல சமாதி , இன்று அக்கினிப் பிரவேசம். (2/6/00)
ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல் அப்பீல் செய்வதற்காக, ஏப்ரல் 3 ஆம் தேதிவரை அந்த தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டு சிறைத்தண்டனை அறிவித்தது காலையில். மதியத்துக்கு மேல்தான் அதிமுக எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் அமைச்சர்களும் வெறி
மூப்பனார் - அரசியலமைப்புச் சட்டம் - சீனா (1/30/00)
மூப்பனார் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். நான் முன்பே சொல்லிவருவதுதான் இது. போபர்ஸ் ஊழலை ஆத்மார்த்த தலைவியாக ஏற்றிருக்கும் மூப்பனாருக்கு வேட்டி சட்டை ஊழலில் என்ன பெரிய குறை இருக்க முடியும் ? ஐக்கிய கூட்டணி ஆதரவுக்கு பதிலாக ஆயிரக்கணக்கான சொத்துள்ள அரசாங்க நிறுவனங
ஜெயலலிதா - பாகிஸ்தான் - பில் பிராட்லி (1/18/00)
ஜெயலலிதாவை டான்ஸி வழக்கிலிருந்து நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். மேல்நீதிமன்றமும் அந்த தீர்ப்பை சரி என்று சொல்லிவிட்டது. அதற்கு முக்கிய காரணமாக இரண்டு நீதிபதிகளும் சொன்னது என்னவென்றால் - அந்த குறிப்பிட்ட சட்டம் , சட்டமே அல்ல என்பதுதான். அது வெறும் நன்னடத்தைக்கான அரசி
கடிதங்கள் - ஜூன் 10,2004 (6/10/04)
திரு.இராசேசு அவர்களின் இரா.சு.ச-காந்தியடிகள் பற்றிய கட்டுரைக்கான எதிர்வினை: இந்துக்களை சாதிக்கூறு போட்டது பிரித்தானியர் என்றும் அவர்களுக்குப்பிறகு அந்நிய நிதி உதவியில் கிறித்தவ மற்றும் இசுலாமியர் என்றதோடு நக்சலைட்டுகளையும் சேர்த்துக் கொண்டு விடுகிறா
இந்த வாரம் இப்படி சூலை 4, 2001 (8/5/01)
*** ஜெயலலிதா முதலமைச்சராக நீடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர், அரசாங்கப் பதவியில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது என்றும், அவர் மேலே அப்பீல் செய்திருந்தாலும், அவர் மேல் நீதி மன்றத்தில் குற்றவாள
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
|
 |
|
Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|