| |
தேடியதில் கிடைத்தவை
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
தேடப்பட்ட வார்த்தை(கள்) " சேவியர்":
கவிதைகள் (2/17/06)
பெறுதல் ஃ ஆயிரம் பேர் கூடியிருக்கும் அவையில் எனக்குப் பொருளுதவி செய்யாதே. விரும்பினால் என் குடிசைக்கு வந்து யாருமறியாமல் தந்து போ நீ தரவிரும்பியவற்றை. கனம் குறைந்திருந்தாலும் மனம் நிறையும் எனக்
கவிதைகள் (2/10/06)
கலையாத சுவடுகள் ஃ புதிய வெளிச்சங்கள் பழைய பிரமிப்புகளை புறக்கணிப்பின் பக்கமாய் புரட்டிப் போடுகிறது. வெளிநாட்டுப் பயணத்தைத் துவங்குகையில் அழகாய்த் தெரிந்த சென்னை விமான நிலையம் திரும்பி வருகையில
கவிதைகள் (2/3/06)
கலைதல் ஃ காலையில் அங்கே இருந்த நிழல் மாலையில் அங்கே இல்லை. காலையில் மெளனமாய் நின்றிருந்த காற்று இப்போது அவ்விடத்தில் இல்லை. அப்போது பார்த்த ஓரிரு பல்லிகளை இப்போது
கவிதைகள் (5/27/04)
தவறான புரிதல்கள் 0 மொட்டை மாடியில் தனியே அமர்ந்து நட்சத்திரங்களின் கவியரயரங்கத்தை ரசித்துக் கொண்டிருக்கையில், இருளின் மெளனத்தை காகிதத்துக்குப் புரியும் வகையில் எழுதிக் கொண்டிருக்கையில், தென்னை
கண்கொத்திச் சாமி. (4/8/04)
0 சாப்பிடலேன்னா பூதம் வந்து கண்ணைக் கொத்திடும் என்று வீட்டோர பாறையிலமர்ந்து பயம் காட்டினார் அப்பா. ஒழுங்கா சாப்பிடு இல்லேன்னா அந்த பாறைல இருக்கிற சாமி கண்ணைக் கொத்திடும் என்றேன் நான். சாப்பிடுப்பா
கடவுள்கள் விற்பனைக்கு (4/8/04)
0 அப்படித் தவறிழைத்தால் இப்படியாவாய் என கதைகளில் சொன்னது கொள்ளுத் தாத்தாக்களின் காலம். தாத்தாக்களின் காலமோ அதை எழுதி வைத்து பெயர் வாங்கிச் சென்றது. அப்பாக்களின் காலம் கதாநாயகர்களைக் கடவுள்களாக்
விலக்கப்பட்ட கனி (4/1/04)
எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின் தொடுதலி
எதிரேறும் மீன்கள் (4/1/04)
0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே தேவைப்படாத காதல் இனித்திருக்குமா
காதல் பொதுவானது (3/25/04)
0 ரயில்வே நிலையத்தின் பின்புற சந்தில் பைக்கில் அமர்ந்திருந்த பையனிடம் அழுத விழிகளோடு வாதிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடமும், கன்னிமேரா நூலகத்து மரத்தடியில் பெண்ணிடம் கெஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்த பையனிடமு
வணக்கம் (3/18/04)
0 பள்ளி ஆசிரியர்களை எப்போது பார்த்தாலும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் பழக்கம் அப்படி. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு கையை மட்டும் வாயளவு தூக்கி வணக்கம் சொல்கிறேன். நண்பர்கள் என்றால் தலைக்கு மேல் கைதூக்கி அசைப்
மூன்று கவிதைகள் (3/11/04)
அலாவுதீன் விளக்கு 0 என்னிடமிருக்கிறது ஒரு விளக்கு. அலாவுதீன் தவறவிட்டதாய் இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விட்டெறிந்ததாய் இருக்கலாம். அது தானாகவே வந்து என் மனசைத் தேய்க்கிறது. வாசலுக்கு
யுகபாரதியின் 'தெப்பக்கட்டை ' (3/4/04)
0 நவீன கவிதைகள் குறித்த பயம் இப்போது பெருமளவுக்கு நீர்த்துப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பிரக்ஞையிலிருந்து விடுபட்ட பிரபஞ்சத்தின் நிதர்சன இருப்பு - என்றெல்லாம் பயமுறுத்தி வந்த நவீன கவிதைகளுக்குப் போட்டியாக எளிமையான மொழியில் சொல்லப்படும் வலி
நிராகரிப்பு (3/4/04)
0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன்<
அருகிருக்கும் மெளனம் (3/4/04)
0 எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும் கிறுக்கி அனுப
யுத்தம் (2/26/04)
0 யுத்தங்களே வாழ்க்கை. விதை, மண்ணோடு செய்யும் யுத்தம் தன் முளைக்கு இடம் கேட்கும் முதல் யுத்தம். முட்டையோட்டுக் கவசங்களோடு குஞ்சு செய்யும் முதல் யுத்தம் தடையுடைக்கும் முதல் யுத்தம். தொப்பு
நீயின்றி ... (2/26/04)
0 ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ அருகில் இருக்கையில். உணர்வுகள் மெலியு
கவிதைகள் (10/23/03)
பறிக்கப்பட்டவைகள் --------------------------------------- 0 மங்களமா இருக்கும் வாங்கிக்கோங்க, கக்கத்தில் இடுக்கிய கூடை நிறைய வாசனையோடு நிற்பாள் பூக்காரி. பூக்களுக்கே வலிக்காமல் பூக்களை பூ போ
அதிர்ஷ்டம் (9/25/03)
0 சுரண்டல் லாட்டரிகளை சுரண்டிச் சுரண்டி விரல் வீங்கியபோதும், மதிப்பெண் பட்டியல் ஒற்றை எண்ணில் என் கனவு எல்லையில் கண்ணிவெடி வெடித்தபோதும், ஆயிரம் நிறங்களோடு எனக்குள் பறந்த ஓர் அலுவல் பறவை சி
அரசியல் இருக்கைகள் (9/4/03)
0 அந்த வேலியோரக் கள்ளியின் மேல் அமர்ந்திருந்தது அந்த ஓணான். காற்று வந்து ஏதோ அதன் காதில் சொல்ல மெல்லத் தலையாட்டியது. மகரந்தக் கால்களோடு நிறச் சவாரி செய்த வண்ணத்துப் பூச்சியும் ஓணான் காதில் மெல்
கோபத்துக்கும் கோபம் வரும் (7/17/03)
0 கோபப்படுகிறேன். கோபப்படக் கூடாதென நான் எடுக்கும் அதிகாலை முடிவுகளெல்லாம் கோபத்தீயில் கருகும் போதும், விட்டு விட வேண்டுமென பிடுங்கி எறியும் விரலிடை வெள்ளைச் சாத்தான் பிடிவாத வேதாளமாய் புகைந்து தொலைக்கும்
மூன்று கவிதைகள் (7/3/03)
மிச்சமிருப்பவை கொதிக்கக் கொதிக்கக் கொட்டும் சூரிய பானத்தை நிலாக் கோப்பை குளிர வைத்துப் பரிமாறும். நிலவும் சூரியனும் இன்னும் அயல் தேசக் காப்புரிமைக்குள் அடைக்கப்படவில்லை. தொட்டு விட இயலாத தூரப் பு
புழுக்களும், இலைகளும் (4/19/03)
0 புழுக்கள் கூட்டமாய் நடத்திய பட்டிமன்றத்தில் இலைகளுக்கு எதிராய் ஏராளம் கூக்குரல்கள். இலைகள் நடத்திய மாநாட்டில் கையொப்பமானது புழுக்களை அழிப்பதற்கான ஏற்பாடு. இலைகள் இடைவிடாமல் முளைத்தன, புழுக்களும் பு
ஞாபக வெற்றிடங்கள் (4/19/03)
0 ஒன்றன் மீது ஒன்றாய் மனதுக்குள் அடுக்கி வைத்த எண்ணங்களை எழுத அமர்கிறேன். எண்ணங்களோ கண்ணாமூச்சி ஆடிவிட்டு காணாமல் போய்விடுகின்றன. நேற்று பேருந்தில் பயணித்தபோது உள்ளுக்குள் போர்க்களப் பரபரப்போடு பவன
அறிவியலுக்கு வெளியே மனது. (3/29/03)
0 ஆண்டவன் இருக்கிறார் என நான் நடும் நம்பிக்கையின் கடுகு விதைகளை என் ஆறறிவு தயவு தாட்சண்யமின்றி நறுக்கிப் போடும். இருக்கின்றார் என்று நான் ஒரு காய் நகர்த்தும் போது, எப்படி ? என நான்கு காய்கள் எனக்கெதிராய்
விக்ரமாதித்யன் கவிதைகள் - ஒரு வாசிப்பு (3/2/03)
0 சமீபத்தில் விக்ரமாதித்யன் முழுக் கவிதைகள் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தீர்க்கமான கண்கள், கூர்மையான நாசி, நீளமான தாடி என்று அட்டையில் கன கம்பீரமாக இருக்கிறார் விக்ரமாதித்யன். நவீன கவிதைகள் பற்றி அதிகம் அறியாமல், படித்தாலும் பெரும்பாலும் பு
நா.முத்துக்குமாரின் 'குழந்தைகள் நிறைந்த வீடு '. - கவிதைப்புத்தக விமர்சனம் (2/23/03)
0 மூன்றே மூன்று வரிகள்... இறுதி வரியில் இதயத்துக்கு அழுத்தமான பாதிப்பு. இது தான் ஹைக்கூ விற்கான அடையாளங்கள். சமீபத்தில் முழு ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு என எதையும் வாசிக்காத குறையைப் போக்கியது கவிஞர் நா.முத்துக்குமாரின் 'குழந்தைகள் நிறைந்த வீடு '. பல கவி
உன் பார்வைகள். (2/15/03)
0 பன் முனைத் தாக்குதல் பரம நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல, அச்சையும் கூடவே அழைத்துச் செல்லும் சக்கரம். மூடி வைக்கும்
சொல்ல மறந்த கவிதை (2/9/03)
0 வெள்ளைப் புன்னகையால் என் மனதில் கனவுகளின் நிறம் ஊற்றிய சின்னப் புறாவே. புன்னகை மின்னலால் என் இதய வானத்தில் வெள்ளை வேரிறக்கியவள் நீ. இதயத்தின் ஒருபாகம் இருண்டு தான் கிடந்தது உன் வெள்ளிக்
புதிய தானியம் (2/2/03)
0 என் வயலில் பொறாமைக் களைகளே நிறைய விளைகின்றன. அவ்வப்போது பிடுங்கி எறியும் களைகளும் கரையிலே காயாமல் காத்திருக்கின்றன. ஏதேனும் ஓர் வாய்ப்பு வரும் போது வரப்புகளை விட்டு மீண்டும் அவை வயலுக்குள் வி
ஒரு நாள் = 40 மணி நேரம். (1/19/03)
ஒரு நாளைக்கு இருக்கும் நீளமே போதும். அதிகம் கிடைத்தால் மட்டும் என்ன ஆகிவிடும் ? முடிக்கப் படாத பணிகள் நிச்சயமாய் மிச்சமிருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்கள் பத்தாகிலும் பக்கமிருக்கும். விடியல் போர்வைக்
பொங்கல் கவிதைகள் (1/12/03)
சிந்தையில் தை. 0 இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைக் கழித்து கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைக
புதுவருடக் கவிதைகள் இரண்டு (12/30/02)
வாழ்த்துக்கள்... வாழ்த்துங்கள் வாருங்கள் மகிழ்வோம். கடந்த தலைமுறைக்குக் கிடைக்கவில்லை, இந்த விஞ்ஞான மனங்களின் வீதியில் உலாவும் பாக்கியம். இது நமக்கே நமக்கான புத்தாண்டு. உடலுக்
செலவுகள் (12/21/02)
0 கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி மின்சார மின்மினிகளை வரிசையாய் நிற்க வைத்தேன், உச்சியில் சின்னதாய் ஓர் செயற்கை நட்சத்திரத்தையும் செய்து வைத்தேன். யதார்த்தமான ஒரு குடிலை வாங்கி குழந்தை இயேசுவை உள்ளே இளைப்பாற வை
மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது = 9 - தொடர்கவிதை (12/21/02)
9 பாலாவின் இதயத் துடிப்பு இதயத்தை விட்டு வெளியேறி காற்றில் பதிந்து காதுகளில் குதித்தது. அத்தனை நரம்புகளிலும் சொல்லாமல் கொள்ளாமல் ஓர் சோர்வு வந்து சேர்ந்து கொண்டது. எங்கே போவது ? வேடந்தாங
காதலும் சிகரெட்டும் (12/15/02)
0 விட்டுவிட வேண்டுமென்று நினைத்தாலும், விட முடியாமல் வந்து பற்றிக் கொள்ளும். நினைக்கும் போதெல்லாம் சந்திக்க வேண்டுமென்று மனசு பரபரக்கும். 0 முதலில் நீ ஆசையாய் அழைத்துச் செல்வாய்.
மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது.. 7 (தொடர்கவிதை) (12/7/02)
7 புயல் ஒன்று நுரையீரலில் நுழைவதாய் மூச்சிரைத்தது பிரியாவிற்கு. வியர்வை ஆங்காங்கே சொல்லிக் கொள்ளாமல் முளைக்க, சோபாவில் சாய்ந்தாள். ஏன் சீக்கிரம் என்ற அம்மாவின் கேள்விக்கு, வார்த்தையில்லாத ஓ
பொதுவுடமை. (11/24/02)
0 எப்போதும் காணக் கிடைக்கிறது கழிப்பறைகளில் கிறுக்கல்கள், நிர்வாண மனதின் அடையாளங்களற்ற வார்த்தைக் குறியீடுகள். முகமூடிகளை முகங்களே திருடிக் கொண்டு, உண்மைகளை ஒப்புவிக்குமிடங்களாய் பக்கச் சுவர்கள்.
மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது - 5 (தொடர்கவிதை) (11/24/02)
5 பாலாவும், பிரியாவும் பாலர்கள் அல்ல. வெப்பத்தின் தெப்பம் தேடும் மனக் கிளர்ச்சி விரிய வைத்த மலர்களுமல்ல. அவர்கள், நிஜ வாழ்வில் நிற்பவர்கள். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின் நீளல் தான் என்பதை உணர்ந்தவ
இலையுதிர்க் காலம். (11/18/02)
0 இது மரங்கள் உடைகளின் நிறம் மாற்றும் காலம். அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம். பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள் நெளிய, இலைகள் எல்லாம் வானவில் போர்த்தி சிரிக்கும் வர்ணங்களின் மாதம்.
மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது...(தொடர்கவிதை ெ3) (11/10/02)
3 பூக்கள் இல்லாத பூங்கா அது. வினாடிகள் வினாடிகளை சிந்தனையோடு தாண்டும் அந்த சின்னச் சின்னக் கணங்களிலும் பாலாவின் கண்கள் சாலை பார்த்துக் கிடந்தன. காதலனை காத்திருக்க வைப்பது காதலின் இலக்கணமோ இல்ை
மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது ... (தொடர்கவிதை -1) (10/27/02)
1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம் பூசிய சுவர்களின் முகத்திலும் காதல் வ
சில விவாதங்கள் (10/22/02)
0 என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு. என் வாக்குவாதங்களின் உண்மை விகிதங்கள் பற்றி. முடிவுகளுக்குள் வேர்விட்டு, பின் வாக்குவாத கிளைகளை வெளியிடும் பலகீனம் பற்றி. என்னை நோக்கி கடந்துவரும் கருத்துக்
நானும், தாத்தாவும் வேப்பமரமும். (10/1/02)
0 மேற்குப் பக்க வேப்பமர நிழலில் தான் தாத்தாவின் மாலை நேர நாற்காலி, எனக்கோ, மின்விசிறிக் காற்று தலையைக் கலைக்க, தொலைக்காட்சி வெயிலில். வேப்ப மரக் குச்சி தான் தாத்தாவின் பல்லுக்கு, எனக்ே
நீ.. நான்... அவன்... (10/1/02)
0 நின்று தொலையாத துன்ப அலையிலும், ஆலயம் பற்றிக் கிடப்பவனே ஆத்திகன். நாளை செத்துப் போவேனென்று சேதி வந்தபின்னும் நாத்திகனாகவே இருப்பவன் தான் நாத்திகன். எந்த நிலை நாளையானாலும் இன்றின் பகுதியில
கலாச்சாரக் கதகளி (9/9/02)
0 இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும். பிரத்யேக ஒப்பனை ஆடை பிராணனை பிழிந்தெடுக்கப் பிரியப்படும். செண்ட, மத்தாளம், சிஞ்சில
சீதை (8/25/02)
0 அன்று காலை ஒரு இராமன் வந்தான் வில்லை ஒடிக்காமலேயே விலகிச் சென்றான், விசாரித்த போது விபரம் தெரிந்தது, சீதையின் தோழி மிக அழகாம். 0 பிறிதொருநாள் தனியே காத்திருந்தாள் சீதை, இன்னோர் இராமன்
ஆர்வம் அபூர்வம் (8/19/02)
0 ஆர்வமெனும் ஆற்றில் தான் அறிவுத் தாமரை விரிகிறது. கேளுங்கள், மறுக்கப் பட்டாலும் மறுதலிக்கப் பட்டாலும் ஏதேனும் உங்களுள் ஊன்றப் படுகிறது. ஆர்வமற்றதும், தேடல்களில்லாததுமான வாழ்க்கை தனக்குள்ளே
சில முற்றுப் புள்ளிகள் (8/19/02)
0 முடிவுகள் இல்லாத முடிவு தேடும் பயணத்தில் நான். சாலைகளின் மீதான பயணமும், சேலைகளின் மீதான சலனமும், பக்கங்களைத் தாண்டி ஓடும் வாக்கியங்களும், வாழ்க்கையில் தங்கி விடும் பாக்கியங்களும், எல்லா
கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள். (8/12/02)
0 வாழ்க்கை என்னும் பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து, தொலைவில் போய் நிற்கிறது. துரத்திப் பார்த்து தோற்றுப் போன ஜனம், நெற்றி வியர்வையை விரல் வளைத்து துடைத்தெறிந்து மீண்டும் நிறுத்தங்களுக்கேத் திரும்புகின்றன.
நிழல் பூசிய முகங்கள் (8/5/02)
0 நிஜமே அழகு !!! இயல்பே அழகு... தென்னைக்கு இலையும் ஆலுக்கு விழுதும் இயற்கை அளித்த அற்புதப் பரிசுகள். தென்னையின் தலையில் ரோஜாப்பூக்களை கற்பனை செய்வதே ஒத்துவரவில்லையே. படைப்பின் மகத்துவம்
ஐந்தாம் வகுப்பு நண்பன். (7/14/02)
ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன். ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும் பாதி தர தவறாதவன். வீட்டுப் பாடங்களை
அவள் அழுகிறாள்.... (7/14/02)
பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் ராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும் அகல்விளக்காய், சுருள் முடிகள் அலைய, வெளிச்சம் விட்டு வெளியேறுகின்ற
நிதான விதைகள்.. (7/7/02)
0 அழுத்தங்களின் வயல் வெளிகளில் நீ முளைப்பிப்பவற்றை வைத்தே உன் உண்மை முகம் எழுதப்படும். அத்தனை தேடல்களும் சந்திக்கப் பட்டபின் உதடுகள் விரிவதில் பெருமை என்ன இருக்கிறது. பாம்புகளே இல்லா தேசத்
சுவாசம் (7/7/02)
0 அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த ஆழமாய், மிரட்டலாய் தோன்றியது<
வெள்ளைக் காகிதம் (6/23/02)
ஒவ்வொரு காலையும் உன்னிடம் ஓர் வெள்ளைத் தாளை கிள்ளித் தருகிறது. சில நாட்கள் அதை நீ கண்ணீர் விட்டு ஈரமாக்குகிறாய். சில தினம் குருதி தொட்டு கோரமாக்குகிறாய். என்ன செய்வதென்னும் யோசனையில்
உண்மை பொய்யல்ல. (6/10/02)
உண்மை பேசுதல் உன்னதமானது. 'பொய்மையும் வாய்மையிடத்து ' எப்போதேனும் பொய்த்து விடலாம். எத்தனை காலம் தான் நிலவைப் பிடித்து குழந்தைக்குக் கொடுக்கும் கதைகள் செல்லும் ? பனிக்கட்டிக்குள் புதைத்த தீக் கட்டிகள்,
படித்தேனா நான் ? (6/2/02)
0 ஒரு அடி ஆழத்துக்கு கலப்பை பிடித்து உழ அண்ணனால் ஆகும், இன்னும் அப்பாவுக்கு தூரத்து பேருந்தின் தலையெழுத்தைப் படிக்க கண்சுருக்க நேர்ந்ததில்லை. அடுப்பில் ஏதோ தீய்ந்து போகிறதென்று கொல்லையில் கொம்பு வெட்டி
கவிதைக்குள் நான் (5/25/02)
ஒரு நீள் மெளனம் ஒரு ஆழ் அமைதி சத்தமிடாத காற்று, ஒரு கவிதை. கவிதையை படிக்கிறேன் மெல்ல மெல்ல சத்தங்கள் வந்து என் செவிப்பறை கொத்துகின்றன. ஆழமாய் ஆழமாய் படிக்கிறேன் சத்தம் அதிகமாகி பின் தே
இரவுக் காட்சிகள் (5/25/02)
எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன. கடைகளின் வாசல்களில் யாராரோ கோண
விழுவதால் விருதா ? (5/18/02)
வெற்றியை எப்படிப் பெற்றுக் கொள்கிறாய் நீ வெற்றிக்காய் வெறியோடு வேட்டையாடுகிறாயா, இல்லை நெறியோடு தான் நடைபோடுகிறாயா ? 0 சொல். இங்கே பலர், எதிராளியைத் தோற்கடிப்பதில் வெற்றி
நீ... உனக்கான வரம். (5/12/02)
நண்பனே... உன்னைப் பற்றி நீயேன் உயர்வாய் நினைக்க தயங்குகிறாய் ? மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ? நீ சொல்லுமிடம் செல்ல உன் கால்கள், நீ நீட்டுமிடம் நிற்க
முற்றத்தில் முதல் சுவடு (5/5/02)
மீன் பிடிக்க குளத்தைக் கலக்குவது தவறில்லைதான், ஆனால் நீ கடலைக் கலக்குவேனென்று பிடிவாதம் பிடிக்கிறாயே ! இலட்சியங்கள் பயிரில் களை பிடுங்கும் பயிற்சி, ஆனால் நீயோ, அலட்சியம் செய்வதையே இலட்சியமாகக் கொள்கிறாயே.<
பூக்கள் பேசுவதில்லையா ? (4/28/02)
நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை இறக
மகிழ்ச்சி என்பது ஒருமை.. (4/21/02)
நான் நினைத்திருந்தவை நிலைத்திருக்கவில்லை. மகிழ்கிறேன். யாரேனும் அளிக்கும் அன்பளிப்புப் பொதிகளோ, வாங்கிக் குவித்த வங்கிக் கணக்குகளோ, எனக்குள் நிலையாய் எதையும் நட்டுவிடவில்லை. மழலை மாலைகளில்
சக்கரம் இல்லா தேர்கள்... (4/14/02)
என் வீட்டுச் சேவல் இன்னும் விழித்தெழவில்லை, கடிகாரம் இல்லா என் வீட்டில் அலாரத்தை வயிற்றில் தான் வைத்திருக்கிறேன். இன்றைக்கு என்ன வேலை எனக்கு ? வரப்புகளின் சகதியோடா ? எரியும் கரிசல்
பின் தங்கிய சுவடுகள் (4/7/02)
கருப்பு மட்டுமே கரைத்து ஊற்றப்பட்ட இரவின் மையம். நீளத்தை விட அகலம் நீளமானதாய் தோன்றும் ஓர் அத்துவானக் காடு. மலையின் மார்பிலடித்து அழுது போகும் மேகங்களும், மரத்தில் அடித்து சத்தமிடும் காற்றும் கண்ணுக்குப் பு
வழியோரம் நதியூறும்... (4/7/02)
சோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கிகளாய் சோர்ந்து கிடக்கின்றன பார்வை பாணங்களிலேயே குனிந்து விழும்
இன்னொரு ஜனனம் (3/30/02)
இன்னொரு ஜனனம் வேண்டுமெனக்கு. சங்க இலக்கியங்களின் சந்துகளில் சுற்றி வந்ததற்காய் கர்வக் கிரீடம் சூட்டிக் கொண்டேன். யாராரோ எழுதியவற்றை தூசு தட்டித் தான் என் கவிதைகளும் பிரசுரமாயின. எல்லைகள் இல்லை எனும
புனித வெள்ளி. (3/24/02)
சமாதானப் புறா ஒன்று சமாதியான நாள். பாரம்பாியத்தை எதிர்த்ததால் பலியிடப்பட்டது பாிசுத்த நதி ஒன்று. வலக்கை செய்வதை இடக்கைக்கு ஏன் விளம்பரம் செய்கிறாய் என்றதால் இரு கை நடுவிலும் அறையப்பட்டன ஆணிகள் !
பனிக்கட்டிச் சிறகுகள். (3/24/02)
ஆணவம், அது அழிவிற்கான அழைப்பிதழ். காளான் குடையை பட்டாபிஷேகமாய் பாவிப்போாின் வறட்டுக் கெளரவ வடிகால்கள். அகந்தைக் கடையில் இலவசமாய் வினியோகிக்கப்படும் வோில்லா நிலக்கடலைச் செடிகள். நான் என்னும்
இன்னொரு நான்... (3/24/02)
என்னோடு நான் கேட்கும் ஏராளம் கேள்விகள், கடலில் எறிந்த எந்திரக் கல்லாய் ஆழமாய் விழுந்து காணாமல் போய் விடுகின்றன. நான், செய்த பானைகள் எல்லாம் வாய் விாிந்தும், தூர் தொலைந்தும் உபயோகமற்றுப் போகின்றன, களிமண்ணோ
லாடம் அடித்த கனவுகள் (3/17/02)
பிரிய நிலவே, எத்தனை நாளாகிறது உன்னைப் பார்த்து. ஓர் பதினான்காம் பிறைபோல நினைவிடுக்கில் நகர்கின்றன நாட்கள். காதலின் கணங்களும் காத்திருப்பின் கனங்களும் கால்களை பாறையோடு பதியனிட்டதாய் இறுகிக் கிடக்கின்றன.
தொடரும் பிரிவுகள் (3/17/02)
உறவுச் சுவரில் உயிர் ஒட்டிய நாளிலிருந்தே பிரிவுப் பிசாசின் கோரப்பற்களில் ஈரம் மாறா இரத்தத் துளிகள். இரு உடல் ஓருயிராய் பிணைந்து, ஓருடல் ஈருயிராய் தாய்மை அணிந்து, பின்னொரு பொழுதில் தொப்புள் கொடியின் நெருக்கம
காவல் (3/2/02)
சந்துகளுக்குப் பின் ஓர் சுடலைமாடன், ஆளுயர அரிவாளோடு. அகல விரித்தக் கண்கள், உறைந்த நிலை உதடு, முறுக்கி இறுக்கிய மீசை, மடித்துக் கட்டிய மண் நிற வேட்டி. சோறுண்ண மறுத்த மழலை ஒன்றுக்கு பயமுறுத்தும் உருவமாய்,
தீ தித்திப்பதில்லை... (3/2/02)
மதமென்னும் மாயப் பொறி மனிதனைக் கொல்லுவதா இதமான இன்னுயிர்கள் தீப்பொறிகள் கொள்ளுவதா மதியீன மானிடரின் வெறி செயல்கள் வெல்லுவதா சதியான செயலென்ன ஆண்டவனே சொல்லுவதா ? ரயில் மீது தீக்கடலை வேகமாய் பாய்ச்சுவதோ மயில் தோகை பிய்த்தெடுத்
மீட்டிங்... (2/10/02)
முனை மழுங்கிய சதுர வடிவில், இல்லையேல் முனை உடைத்த முட்டை வடிவில், ஏதோ ஒரு வடிவில் இருக்கும் அந்த அறை. பெரிய தேனீர் கோப்பைகளோ குளிர்பான பாட்டில்களோ கைகளில் ஏந்தி, சிரித்துக் கொண்டே ஏதேதோ பேசுவார்கள். புரியக
மன்னிப்பே தண்டனை... (2/3/02)
மன்னியுங்கள்... மன்னிக்கப்படுவீர்கள். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும். மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை மன்னிப்புகள் மட்டுமே கொளுத்தும். பயத்தின் மூக்கண
நண்பா..... (2/3/02)
'அதை நினைத்துச் சொல்லவில்லை... ' என்கிறாய்... ஆனால் இதைச் சொல்லும்போது கூட அதையே தான் நினைக்கிறாய். எதற்காகச் சொல்கிறாயோ 'அதற்காக இல்லை ' என்றே அமைதியாய் ஆரம்பிக்கிறாய். 'நான் எப்போதுமே..
அது அந்தக் காலம்.... (1/27/02)
வளர்ச்சியின் விகிதம் இப்போதெல்லாம் என்னை இனம்புரியா மனநிலைக்குள் இழுத்துச் செல்கிறது. 'அப்படின்னா என்னம்மா ? ' என்று, பதின் வயதுக் காலங்களில் நான் கேட்ட கேள்விகளுக்கு, நர்சரி நாவுகளில் இன்று விடை. சைக்கிள் ஓ
இன்னொரு வேனிற்காலம்... (1/20/02)
கண்மணி.... கனவுகளின் கூடாரத்திலிருந்து என்னைக் கடத்தி, கீழ்கிரகத் தாழ்வாரம் ஒன்றில் ஆயுள்கைதியாக்கிய அவஸ்தை உன் பிாிவில். நேற்றுவரை மேகத்தின் மேல் கூடுகட்டிக் குடியிருந்த இருட்டு கால் வழுக்கி என் வாசலில் விழுந்து விட்டது.<
திறந்தவெளி... (11/25/01)
வாழ்க்கை உனக்கான வரம். வரத்தின் கரம் உடைக்க தற்கொலையோடு ஏன் ஒப்பந்தம் ? கண்விழிக்கும் ஜனனத்தின் முதல் படி, அழுகை தான், அழாமல் பிறந்தவர்கள் சிாிப்பைச் சம்பாதித்ததில்லை. மொத்த இன்பங்களையும் முன்ப
முதுமை (11/25/01)
வயோதிகத்தின் வழிப்பாதை. அது இன்னொரு பிரசவத்தின் பிரயாசை. ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில் கால் முட்டிகள், அதிர்ந்து தும்மினால் அறுந்து வீழும் வலியில் அரற்றும் அங்கங்கள். சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும் ஆமை வாழ்க்கை
எாிச்சலின் புதல்வன்... (11/11/01)
யார் மீதோ எதெதற்கோ எாிந்து விழுகிறேன். காிந்து கொண்டிருக்கின்றன என் பொறுமையின் கரங்கள். நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன. குழப்பத்தின் படபடப்பின் பத்தாயிரம் விரல்கள் என் உள்ளப்பிரதேசம் உழுகின்றன. தேவையில்லாத தேடல்களி
நலமா (11/4/01)
நலமா, எனும் விசாரிப்புகள் தொடரும். செவிப்பறைகள் பதில் வருமுன் பூட்டிக் கொள்ளும். உன்னைப் பார்த்ததில் மனசு மகிழ்கிறது எனும்போதும், கண்கள் தூக்கக் கலக்கத்தில் விழிக்கும். மிச்சமிருப்பதெல்லாம் சொற்களுக்கும்
கண்ணீர் (10/29/01)
தேசங்கள் தோறும் பாயும் சமத்துவ நதி கண்ணீர். இதயக்காட்டுக்குள் இடிவிழும்போதும், மனசின் மதில் சுவரில் மண்வெட்டிகள் மூர்க்கத்தனமாய் மோதும் போதும், கண்களில் விழும் மழை கண்ணீர். தோல்விகளும், ஏமாற்றங்களும் க
கிளி ஜோசியம்... (10/22/01)
கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஆலமர அடியில் கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி. வாிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைகளை, அலகுகளில் கொத்தி கலைத்தெடுத்து, பின் நெல்மணி கொத்தி நகர்ந்து நிற்கும். ஒவ்வோர் அட்டையு
பழைய இலைகள்... (10/15/01)
ஏதேனும் வேண்டும் என்றால் என் கரம் கோர்த்து புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்... உன் உதட்டில் பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்... யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில் சீண்டாதீர்கள்
இன்னொரு வகை இரத்தம் (10/15/01)
இந்த வன்முறைக்குப் பின்னால் இருக்கும் தீவிரவாதிகளை கடுமையாகத் தண்டிப்போம். இனி உலகில் இரண்டு குழுக்கள் தான். ஒன்று தீவிரவாத ஆதரவு இயக்கம், இன்னொன்று தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பு. தீவிரவாதிகளை ஆதாிக்கும் நாடுகளோடெல்லாம் அமொிக்கா இனிமேல் எந்தவிதமான வர
எதிர்பார்ப்புகள்... (10/7/01)
கேள்விகளின் முனைகள் எப்படி வேண்டுமானாலும் வளையட்டும் கவலையில்லை, பதில் மட்டும் அன்பு என முடிந்தால். பொன்வண்டுகளோடு பாடித்திாிவதும், பூக்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும், கயல் மீன்களுக்கு கவிதை கற்றுக் கொடுப்பதும் சுகம் தான்.
மேலும் சில மனிதர்கள்... (10/7/01)
அப்பா.... என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்... டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு.. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ? கொஞ்சம் செல்லம், கொஞ்சம் வேண்டுகோள் கலந்து கேட்டாள் அபினயா. அபினயா, பரந்தாமனின் செ
இன்னொரு முற்றுப்புள்ளி.... (10/1/01)
இந்த தீவிரவாதம் இதோ இன்னொருமுறை மண்ணுக்குள் மனித உயிர் காய்ச்சி ஊற்றியிருக்கிறது. ஒரு போருக்காய் ஒரு பதிலடி, அந்த பதிலடிக்காய் இன்னொரு போர், எப்போதுதான் முடியப் போகிறதோ இந்த பல்லுக்குப் பல் போராட்டம். பாம்புகளோடு
பாத்திரம்... (9/24/01)
கைகளில் புழுதிப் பிரவாகம், அழுக்குகளால் நனைக்கப்பட்ட கசங்கிய ஆடை, தடதடக்கும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான் அவன். தலை முடி அலங்கோலமாய் அசைந்து கொண்டிருக்கிறது... கைகளில் வறுமையின் அடையாள அட்டையாய் தகரப் பாத
நான் தான் W T C பேசுகிறேன்.... (9/24/01)
நெடு நாட்களாய் நெஞ்சு நிமிர்த்தி நின்றேன் விழுப்புண் கொடுத்து என்னை விழ வைத்து விட்டார்கள். நியூயார்க் நகாின் நீளமான சாலைகள் என் நிழல் விழுந்ததால் சிறிதாகிக் கிடந்ததுண்டு. சுதந்திர தேவியின் தீபச் சுடர் என் நிழல் பூசியத
வாடகை வாழ்க்கை... (9/17/01)
வெள்ளைச்சட்டை போட்டு பேருந்தில் ஏறும்போதெல்லாம் அழுக்காகி விடுமோ எனும் கவலை தான் அகம் முழுதும். அலுவலகம் அருகில் என்றால் நடந்தே போய் விடலாம்.... ஆனால் அது அரை மணி நேரத் தொலைவு. ஆட்டோவில் போக நினைத்தால் பரிதாபப்
பட்டினிப் படுக்கைகள்... (9/10/01)
( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம் கண்ணீர் சிந
பாரம் (9/10/01)
உள்ளீடற்ற சில உருவக எண்ணங்கள், மூலம் தொலைந்து போன சில உணர்வுகளின் நகக்கீறல்கள், உருவம் தெளிய மறுக்கும் ஏதோ ஓர் இருட்டுக் கரத்தின் விஷப்பாய்ச்சல்கள், துழாவித் துழாவி கால்களாகிப் போகும் கரங்கள், இன்னும் இன்னும் காதுக்குள் நெருங
மெளனமாய் ஒரு மரணம். (9/2/01)
தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்... குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒட்டுமொத்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு வக்கீலை ஏற
கேட்டால் காதல் என்பீர்கள்... (8/19/01)
தொலைபேசியில் கேட்ட குரலால் அதிர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளப்பட்டேன். அவள் தான் பேசுகிறாள். எப்படியும் இரண்டு மூன்று வருடங்களாவது இருக்கும் அவளோடு பேசி. இருந்தாலும் அந்த ஒரே குரலில் கண்டுபிடிக்குமளவுக்கு அவளுடைய குரல் மனசுக்குள் பதியமிடப்பட்டிருந்தது. ஏன் இப்போது பேசு
நிகழ்வின் நிழல்கள்..... (7/29/01)
அந்த காகத்தின் கூட்டிற்குள் காரிருள் நேரத்தில் சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது இசைக்குயில் ஒன்று... முளைதெரியும் வரை பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லை... காகத்தின் கதகதப்பில் குயில் குஞ்சு முட்டைக்குள் முளைக்கத் துவங்
இருக்கிறது..ஆனால் இல்லை... (7/29/01)
வேறென்ன இருக்கிறது உலகில் இந்த உயிர் கோதும் உறவுகள் தவிர... சொந்தத்தை சோற்றில் குழைத்து ஊற்றும் அம்மா... கனவுகளுடன் கைப்பிடித்து நடத்தும் அப்பா... சின்னப் புன்னகையோடு செல்லமாய் சண்டையிடும் தங்கை, அண்ணா எனும் ஒற்றை வ
தோற்றுப்போகாதே.... (7/15/01)
தற்கொலை... இது கோழைகளால் எழுதப்பட்டு கோழைகளால் வாசிக்கப்படும் வாக்கியம். சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வு குடிசைக்குத் தீயிடுவதா ? விட்டில்களோடு பயமென்றால் விளக்குகளைப் பலியிடுவதா ? தோல்விகள் வந்து தோல் கிழித்தால் பாம்புகளாய்
தொடர்ச்சியாய் சில தவறுகள். (7/7/01)
அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம் பழி வாங்கும் படலம். எந்தப் படலத்தின் கடைசியிலும் பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான். மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி மனிதாபிமானத்தை படுக்கைஅறைக்குள்ளேயே படுகொலை செய்கின்றன.<
முடிவின் துவக்கம்..... (6/29/01)
இனிய காதலனே.... ஒரே ஒரு முறை பேசவேண்டும் எனக்கு... உனக்கும் எனக்கும் மாங்கல்ய முடிச்சு விழுவதற்கு முன்பே நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன. காதலிக்கும் போதெல்லாம் எதுவுமில்லாமலேயே வாய்வலிக்க மணிக்கணக்காய் மணக்க மணக்கப்
இதயம் கூடவா இரும்பு ? (6/29/01)
இதயம் இரயிலை விட அதிகமாய் தட தடக்கிறது. தலைப்புச் செய்தியின் தலையில் தடம் புரண்ட இரயின் படம். மழை வந்து மனசை நனைத்த போது இதயம் முழுதும் பறந்தன ஓராயிரம் பட்டாம் பூச்சிகள், மழை யின் கரங்கள் இரயிலை இழுத்தபோது அத்தனை பூச்ச
5 கவிதைகள் (6/23/01)
1 தேசம் எனக்கு, தேசியக்கொடி உனக்கு.... இந்த அமெரிக்காவின் வெள்ளை வீடுகளின் வெளிப்புறத்தில் தேசியக் கொடியைக் காணும் போதெல்லாம் என் பாரதம் எனக்குள் விழுகிறது. எனக்குப் பிடித்த இடத்தில் கொடியைப் பறக்க விட இன்னும்
அரசாண்ட கூடு. (6/18/01)
**** அந்தப் பரம்பரை வீடு ஏலத்துக்குப் போகிறது. வரிசை கலையாமல் வைத்த புள்ளிகள், குதிரைக்குளம்படிகளால் கலையத்துவங்கியிருந்தது. ஓரமான அந்த சாய்வு நாற்காலியில் பிரபஞ்ச சோகத்தின் பிரதிபலிப்பாய், வளைந்த கைத்தடியுடன்
பயம் (6/10/01)
சில பயங்களின் சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப் பறந்துப் பழக்கப்பட்டது தான் மனித இனம். அப்பாவின் குரலின் கம்பீரத்தில் மருளும் விழிகள் வழிய அவசர அவசரமாய் இரவு உணவு அருந்திய சிறு வயதுப் பயம்... வகுப்புக்கணக்கைப் போட மறந்
நாளை மீண்டும் காற்று வீசும்... (5/27/01)
என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில் சிாித்துக் கிடக்கிறது என் மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும் ஆளுயரக் கரடி பொம்மை... வலது சுவர் ஓரத்தில் விட்டம் விரலால் தொட்டுப்பார்க்கும் தூரத்தில் செயற்கைக் குளிர் செலுத்திக் கொண்டிருக்கிறது
நண்பன் (5/27/01)
ஒரு காலத்தில் அவன் என் பிாியத்தின் பிரதிநிதி நண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள் திணிக்க முடியாத தோழன். என் பள்ளிக்கூட நாட்களின் பல்லாங்குழிச் சினேகிதன். தவளைக்குளத்தில் நீச்சலடித்து, தூண்டில் நுனியில் மண்புழு சொருகி
இனியும் விடியும்.... (5/19/01)
அந்த பெரிய அறையில் குழுமியிருந்த அத்தனை பேரும் வினாடி நேரத்தில் ஊமையாகிப் போனார்கள். அத்தனை முகங்களிலும் அதிர்ச்சியின் ரேகைகள். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து ஏதோ பேச முயன்று நாவடங்கிப்போன அவஸ்த்தை. அதுவரை அந்த அறையில் இருந்த கலகலப்பும், சிரிப்பும் உ
மீனவ வாழ்க்கை (4/30/01)
உப்புக்கடலின் கரையோரம் தினமும் நடக்கிறது கண்ணீர் வாழ்க்கை. வலைகளுக்குள் மீன் தேடி, கடல் போடும் தூண்டிலில் அவ்வப்போது உயிர் துறக்கும் மீனவர்கள்... நாளைய வாழ்வை கயிறு கட்டி இழுக்கும் கட்டு மரங்களின் முதுகில்.. கடல் நீரில்
தேர்தல் (4/30/01)
இதோ மீண்டும் ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர்... சுருக்குக் கயிரோடும்... கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநல சிங்கங்கள் வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி... வருவாய்க் கணக்
இரண்டாவது சாவு. (4/22/01)
சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி .... எதிரே இருந்த கல்லூாி கேண்டான் சுவாில் மோதியது படுவேகமாக.... என்ன நடக்கிறது என்று புாிவதற்குள் தூக்கி வீசப்பட்டார்கள் வண்டியை ஓட்டிவந்த ராஜேஷ்-ம், பின்னால் அமர்
சிலுவையில் ஓர் சிவப்புப் புறா (4/15/01)
என்ன செய்வது ?இங்கே,அர்த்தங்களைவிடஅர்த்தப்படுத்தப் பட்டவை தான் அதிகமாய் விலை போகின்றன. இரவல் கண்ணீரை கண்களுக்கு வழங்கிமரச் சிலுவைமுன் மண்டியிட்டுக் கிடக்கும்,மதக்கூட்டம்மதிப்பிழந்த மதிப்பீடுகளை மனசுக்குள் உயிர்ப்பித்துக்
தலைப்பிரசவம்... (4/8/01)
காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம்... காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது. நாளை மனைவிக்கு பிரசவம் என்று நாள் சொல்லியிருந்தார்கள், அதனால்
நீ (3/25/01)
ஒரு துளி...கொல்லைப்புறத்தில் ஓர் சருகின் மேல்...புாியவில்லை...மரம் தேக்கிவைத்த மழையின் மிச்சமா ?இரவு நகர்ந்தபோது விழுந்த எச்சமா ?எதுவும் புாியவில்லை...அடுத்த நிமிடம் காற்று வீசலாம்சருகோடு சேர்ந்து துளியும் சமாதியாகலாம்..அழுக்கான
பாட்டி (3/11/01)
இப்போதெல்லாம் எனக்குபாட்டியின் ஞாபகம்அடிக்கடி வருகிறது... கொஞ்சம் அன்புக்காகஎனது சிறு புன்னகைக்காகஜ 'வனுக்குள் பாசத்தின் ஜென்மத்தைப்பதுக்கி வைத்திருந்த பாட்டி... எனக்குத் தொிந்துபாட்டியின் நெடும் பயண நேரமேசந்தைக்கும்<
இயலாமை (2/26/01)
இதை நிறுத்தவே முடியாதா என்று வருத்தப்படுகிறேன்...ஒவ்வொரு முறைவிரலிடுக்கில்சிகரெட் புகையும் போதும்உன்நினைவுகளின் வெப்பத்தில்இதயம்எாியும் போதும்....
ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது.... (2/11/01)
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சையைக் கட்டி வைத்திருந்த கிராமம் தன் கோவணத்தைக் கழட்டிவிட்டு காங்கிாீட் நிழலில் கால்நீட்டியிருக்கிறது.... இதோ இங்கிருந்து துவங்கி சர்ப்பக் குளத்தின் எல்லைவரை மொத்த நிலத்துக்கும் நான் தான்
அவமானத்துடன் ஓர் அாிவாள்..... (2/4/01)
மனிதர்களே... உங்கள் மனங்களைக் கூர்தீட்டி தயவு செய்து எங்களை துருப்பிடிக்க விடுங்கள். மொழிக்குள் மட்டும் இருக்கட்டும் ஆயுத எழுத்து அதை மட்டுமே உபயோகிப்பேன் என்று அடம் பிடிக்காதீர்கள். உங்களைப் புாிந்து கொள்ள முடியவ
முப்பெருவெளியின் சங்கமம் (12/13/07)
ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது (12/6/07)
நிச்சயிக்கப்பட்ட திருமணம் (11/15/07)
SMS கவிதைகள் (11/25/04)
1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள் உன் மனம் நனைக்கும் மழையாக உன் கண் கவரும் பசுமையாக உன் செவியில் தலாட்டு இசையாக உன் உடல் தழுவும் தென்றலாக நீ முத்தமிடும் குழந்தையாக நீ கட்டி அனைத்து தூங்கும் தலையனையாக உன்னை பரவசமூட்
மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது ... (10, 11 இறுதிப்பகுதிகள்) (12/30/02)
10 இணையின் நிலை அறியாது காத்திருக்கும் காலம் கொடியதா ? காத்திருக்கும் காலத்தில் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சினில் தைக்கும் காதல் கொடியதா ? ப்ரியா காத்திருந்தாள். கண்களைத் தொலைக்காட்சியிலும் காதுகளைத் தொ
ஒரு கடற்கரையின் இரவு... (2/19/01)
விாிந்த கடலின் ஓரம் பாய்ந்து பாய்ந்து தேய்ந்து போன கரை... உப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும் கட்டுக்குள் நிற்காத காற்று... மனசு நனைகிறது... என் மணல் மேனி முழுதும் பல்லாயிரம் சுவடுகள்... மாலைப் பொழுது விடியும் பே
ஓலோல் சர்ச், புகிஸ், சிங்கப்பூரில் பொங்கல் விழா - செய்தி (1/26/07)
இரண்டு கவிதைகள் (6/26/03)
** மீண்டும் மீண்டும்... ** என் பெயரை நீ உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் மீண்டும்... பிறக்கிறேன்!!! *** உடனடி கவிதை *** உடனடியாக ஒரு கவிதை கேட்ட கள்ளியிடம்....
2 ஹைக்கூக்கள் (5/18/03)
அவள் விழிகள் ------------------------- மீன்களே தூண்டில் போட்டன..... போர் --------- வல்லரசுகளின் வல்லன்மையை விளக்கும் விளையாட்டு.... த.ஆரோக
அன்னையர் தின வாழ்த்து (5/10/03)
அ ன்பை பொழிந்து ஆ ற்றல் அளித்து இ ன்னுயிர் ஈ ந்து உ திரத்தை உணவாக்கி ஊ ன் நோக எனைக்காத்து எ தையும் எதிர்பார்க்காது ஏ ட்டறிவு எனக்களித்து ஐ யா என்றழைத்து ஒ வ்வொரு கணமும் ஓ டியாடி உழைத்து ஒள வைவயாகிவிட்ட
எது வரை........ ? (4/27/03)
மண் மீது விழும் வரை மழை....... கடலுடன் கலக்கும் வரை நதி....... மதம் பிடிக்காத வரை மனிதன்....... மதம் நீக்கி....... ம(னி)தம் காண்போம். saxsun76@yahoo.com
என் பஞ்சபூதமே.... (4/19/03)
உன்னை காற்று என்பேன் தினமும் உன் நினைவை சுவாசிப்பதால்...... உன்னை நெருப்பு என்பேன் என் நெஞ்சில் கதகதப்பாய் இருப்பதால்...... உன்னை நீர் என்பேன் நீ இல்லாமல் நான் வாழ முடியாததால்...... உன்னை ஆகாயம் என்பேன் என் எண்ணம் எங்
கவிதைகள் (8/12/01)
நீ, நான், அவர்களின் தேசம்.... மீன் கொத்திகளின் அலகுகளுக்கிடையே மூர்க்கத்தனமான மூக்கணாங்கயிறுகள். மீன்களுக்கு நேரம் தவறாமல் உணவு தூண்டில்களில். நண்டுகளின் விரல்கள் சேர்த்து அறையப்பட்ட ஆணிகள், வளைகளின் வ
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1) |
|
|
 |
|
Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|