Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " மலர் மன்னன்":

தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள் (7/4/10)


ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? (6/13/10)

சாதியின் அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக எச்.ஜி. ரசூல் கட்டுரையினைப் படித்தேன். எனக்குத் தெரிந்ததையும் திண்ணை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது.

முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை (6/11/09)


ஹனிஃபாவின் "அழைக்கின்றார் அண்ணா' (5/1/09)

தி.மு.கவின் தொடக்க காலத்தில் அதனை அசுர வேகத்தில் பரவச் செய்த பெருமையில் ஹனிஃபா அவர்களுக்கு முக்கிய பங்குண்டு. அண்ணாவை அவரது அபிமானிகள் புளகாங்கிதம் அடையச் செய்யும் அளவுக்குக் கொண்டாடியதும் ஹனிஃபா அவர்களின் குரல்தான். அண்ணாவை அன்றைய தி.மு.க. தொண்டன் தனது நாடி நரம்புகளில் எல்லாம் ரத்த ஓட்டம் போல ஓடச் செய்துகொண்டதற்கு ஒரு வலிமையான உந்து சக்தியாக இருந்தது ஹனிஃபாவின் குரலுந்தான்.

தமிழ் நாடு பெயர் மாற்றம்: மாநிலங்களவையில் அண்ணா (8/17/08)

"நாங்கள் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிக் கோண்டிருந்த போது வெட்ட வெளியில் பேசிக் கொண்டிருக்காதே, முடிந்தால் உள்ளே வந்து பேசு என்றார்கள். சரி என்று உள்ளே வந்தோம். இங்கே பேசுவதைக் கேட்டு உனக்கு ஒரு எதிர்க் கட்சி எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசத் தெரியவில்லை என்கிறீர்கள். போகிற போக்கைப் பார்த்தால் ஒரு எதிர்க் கட்சி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக வெகு சீக்கிரமே நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்துவிடுவீர்கள் போலிருக்கிறது."

நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன் (7/17/08)

அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபோது கட்சி வேறுபாடு இன்றி, கொள்கை, கோட்பாடு என்கிற பிரக்ஞையின்றி அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள். "இந்த மனிதர் நல்ல சுபாவம் உள்ளவர். எவர் மீதும் துவேஷம் பாராட்டாதவர். தவறுகளுக்கு இடமளிக்காதவர். நிர்வாகத்தை நேர்மையாக நடத்தக் கூடியவர். ஏனென்றால் பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர்' என்று அனைவருக்குமே அவர் மீது நம்பிக்கை இருந்தது.

கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம் (5/1/08)

எனது நாஸ்திக நிலைப்பாடு மறைவதற்கு விவிலிய வாசிப்பு காரணமாக இருந்தது என்பதை முன்பே ஒருமுறை பதிவு செய்திருக்கிறேன். நான் எழுதுவதையெல்லாம் விடாமல் படித்து நினைவிலும் வைத்துக் கொண்டிருக்கிற பலர், அது எப்படி சாத்தியம் என்று மிகவும் ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு. இதற்கு என்ன பதில் சொல்வது? எப்படிப் புரிய வைப்பது? கசாப்புக் காரனிடம் உபதேசம் கிடைக்குமாறு வாய்த்த கதையும் நம்மிடமே உண்டுதானே.

தட்டிக் கேட்க ஆளில்லாதவர்கள் (4/25/08)

ஈராக்கில் இன்று தினந்தோறும் ஐம்பது, நூறு என்று குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் எனப் பலரும் பயங்கர வாதத்திற்கு உயிர்ப் பலியாகிக்கொண்டும் நிரந்தரமாக உடல் ஊனப்பட்டும் வருகிறார்கள். வழிபாட்டுத் தலங்கள், மருத்துவ மனைகள், இறுதிச் சடங்கு இரங்கல் கூட்டங்கள், திருமண வைபவங்கள் என்றெல்லாம் பேதம் பார்க்காது, சுன்னிகளும் ஷியாக்களும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கும் சமயம் பார்த்து, அதுதான் அதிக அளவில் உயிர்ப் பலி வாங்குவதற்குச் சரியான தருணம் எனத் தேர்ந்து, வழிபாட்டுத் தலங்களின் மீது இரு தரப்பாரும் கூசாமல் குண்டு வீசித் தாக்குதல் நடத்துகிறார்கள். இவ்வளவுக்கும் அவ்விரு வழிபாட்டுத் தலங்களுமே மசூதிகள்தாம். இந்த முரண் பற்றி ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

"ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" - குமரி முனை விவேகானந்தர் நினைவாலயம்: அண்ணா அளித்த ஆதரவு (4/25/08)


சித்திரைதான் புத்தாண்டு (4/17/08)


சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்! (4/10/08)

(ஏப்ரல் 14: டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினச் சிறப்புக் கட்டுரை)

லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு (2/21/08)


கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி (2/21/08)

அண்ணா அவர்களால் அவரது கட்சியில் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சிலரில் ராஜாராமும் ஒருவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இயல்பாகவே சூது வாதில்லாமல், சுய நலத்திலேயே குறியாக இல்லாமல் நல்ல உள்ளத்துடன் இருப்பவர்களைத்தான் அண்ணா நேசித்தார். கஸ்தூரி ராஜாராம் அப்படிப்பட்டவராக இருந்ததால்தான் அண்ணாவின் தனிப்பட்ட பாசத்திற்குரியவராக இருக்கமுடிந்தது.

வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம் (1/17/08)

முகமதியருக்கு அவர்களின் இறைத் தூதரைக் காட்டிலும் மேம்பட்டவர் எவருமில்லை. இறை மறுப்பைக் கூட அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் தம் இறைத் தூதரைப் பற்றி ஒரு சொல் விமர்சனமாக வந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே அவர் பெயரால் அவர்களை அழைப்பது அவர்களுக்கு நியாயப்படி மகிழ்ச்சியையும் பெருமையையும்தான் அளிக்க வேண்டும். நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை.

கத்தி குத்திய இடம்... (1/10/08)


லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா (1/4/08)

எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் சிந்தனை வளம் மிக்க எழுத்தாளர். தொகுப்பிற்கு அவர் வைத்த தலைப்பே அதனை உறுதி செய்தது: சந்நிதிகள், பிராகாரங்கள், வீதிகள்! லா. ச. ரா.வின் எழுத்தைப் பார்ப்பவர்களை இப்படித் தரம் பிரித்துக் காட்டியதும் சரிதான்.

முகமதிய பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல் விமர்சகர்கள் (1/4/08)

மோடியை அகற்ற முகமதிய பயங்கரவாதிகளுக்கு கரண் தாப்பர் அழைப்பு விடுக்கிறார் என்பதைத் தவிர அதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? ஒரு ஊடக அரசியல் விமர்சகர் இப்படி வெளிப்படையாக வன்முறை வெறியுடன் பயங்கர வாதிகளுக்கு ஆலோசனை சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்?

இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும் (12/27/07)


டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள் (11/29/07)


தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை (11/22/07)

புதுச்சேரிக்குச் சென்ற சமயம், சம்பந்தப்பட்ட மாதா ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று, அங்கு ஈசுவரன் கோயில் சிதைவுகள் ஆலயப் படிக்கட்டுகளாகப் பயன் படுத்தப்பட்டிருப்பதையும், அவற்றி லுள்ள ஹிந்து தெய்வ உருவங்கள் ஆலயத்திற்குச் செல்வோரும் திரும்பி வருவோரும் மிதிபடுமாறு உள்ளமையையும் காண்பித்தார்.

சிவசேனையின் வட்டார வாசனை நீங்க... (11/15/07)


சிவ சேனை பற்றிச் சில நினைவுகள் (10/25/07)

பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டி கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட மும்பை அரசியலையும் தொட்டுத் தனது முற்போக்கு மதச் சார்பற்ற நிலைப்பாட்டை நிறுவ அவர் முற்படுவதாயிருந்தால் சிவ சேனையின் பால் தாக்கரேயையும் பிறரையும் சந்தித்துச் சரியான விவரங்களைச் சேகரித்துச் சேர்த்திருக்க வேண்டும்.

தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம் (10/11/07)


கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம் (9/27/07)

பொருளாதார வல்லுனர்கள்தான் தங்கள் பார்வையில் சேது சமுத்திரத் திட்டம் செல்லுபடியாகாத திட்டம் என்கிறார்கள் என்றால், தேசப் பாதுகாப்பு, சுற்றுப் புறச் சூழல், இயற்கையாகவே உருவாகிய நூதனத் தொல்பொருள் பாதுகாப்பு, அரிய வகை உயிரினங்களை அழியாது காத்தல், நமது தொன்மையான காலாசார அடையாளத்தை மதித்துப் போற்றுதல், ஆன்மிக உணர்வு, சமய நம்பிக்கை ஆகியற்றில் ஈடுபாடுள்ள ஆர்வலர்களும், புவிஇயலாளரும் அவரவர் கண்ணோட்டப்படியும் இது கிடப்பில் போடப் பட வேண்டிய திட்டம் என்றுதான் சொல்கிறார்கள்!

பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது - மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா (9/27/07)

அமெரிக்கா தனது நலன் கருதி உலகின் எந்த இடத்தில் காலூன்றிக் கொள்ள முனைந்தாலும் அது உலகம் முழுமைக்கும் உறுதியான பாதுகாப்பு அரணாகவே இருக்கும் என்றும், இன்றைய சர்வ தேசப் பொதுப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அமெரிக்க எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவது புத்திசாலித்தனம் அல்ல எனவும் முடிவுசெய்யவேண்டியுள்ளது. குறிப்பாகத் தென் பாரதம், வட கிழக்கு இலங்கை ஆகிய இடங்களில் அமெரிக்காவின் நடமாட்டம் இருப்பது சீனா, முகமதிய பயங்கரவாதம் ஆகிய இரு அச்சுறுத்தல்களுக்கும் அரணாகவே இருக்கும்.

சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என! (9/20/07)

ஸ்ரீ ராம ஸேது ஒரு நீண்ட நெடிய கால கலாசாரத்தின் அடையாளம். தொன்மையான தொரு மாபெரும் சமூகத்தின் உயிரோட்டத்தில் இறண்டறக் கலந்துவிட்ட நம்பிக்கையின் அடையாளமும் கூட. நமது தொல்லியல் துறையில் பொதுவாகப் புராதனக் கட்டிட நிர்மாணங்களைப் பற்றிய புள்ளி விவரங்களைத்தான் வைத்திருப்பார்கள்.

காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம் (9/13/07)

சைவ சித்தாந்தமும் பவுத்தமும் தத்துவார்த்த சிகரங்களைத் தொட்டு நின்ற காஷ்மீரில் ஈரான் என இன்று வழங்கப்படும் பாரசீகத்தின் வழியாகத்தான் முகமதியம் நுழைந்தது. இது நடந்தது 1370ல். காஷ்மீர் முகமதிய மயமான பின்னரும் அதன் அசலான அடையாளங்கள் இன்றளவும் நீடிக்கவே செய்கின்றன. எந்தக் காராணத்திற்காக ஹிந்து சமூகம் கடுமையான விமர்சனங் களைத் தாங்கிக் கொள்ள நேர்ந்துள்ளதோ அந்தக் காரணமான ஜாதி அடையாளங்களை இன்று பல காஷ்மீரி முகமதியர்கள் பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை.

எண் கோணத்தின் நான்கு கோணக் கேள்விகளுக்கு எனது பதில் (8/2/07)

கடந்த கால வரலாற்றில் ஹிந்து நலன் கருதிய ஷேர்ஷா என்கிற இடைக்கால ஆப்கன் வமிசத்து தில்லி சுல்தானின் ஆட்சியை ஹிந்துக்கள் மனமுவந்து ஏற்றனர். 1857 கிளர்ச்சியின் போது, செயலற்றுக் கிடந்த மொகலாய மன்னர் பகதூர் ஷா வைக்கூட கும்பினிக்கு மாற்று தலைமையாக ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக ஹிந்துக்கள் ஏற்கத் தயங்கவில்லை. கலை, இலக்கியம், கலாசாரம் ஆகிய தளங்களிலும், ஹிந்து உணர்வுகளை மதித்து நடப்பவர்களையும் கண்ணியமான விமர்சனங்களை வைத்து சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் வலியுறுத்துவோரையும், அவர்களின் தலைமைப் பண்பு கருதி ஏற்க ஹிந்துக்கள் தவறுவதில்லை

மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன? (8/2/07)

தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றுக்கு ஊறு நேராதவாறு பார்த்துக் கொள்வது இன்றைய நாகரிக சமுதாயங்களின் நடைமுறை. மலேசியாவில் இதற்கு சாத்தியமில்லையெனில், அது அங்குள்ள நடைமுறை; அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்று சகஜமாகச் சொல்லிவிட்டுப் போவது முதிர்ச்சியுள்ளவர்களுக்கு அழகல்ல.

ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள் (6/7/07)

பொதுவாக இம்மாதிரியான திரைப்படங்கள் கற்பனைக்கு இடமில்லாத ஆவணப்படங்களாகத்தான் அமைய வேண்டும். ஆனால் ஞான ராஜசேகரனின் பெரியார், அவரது நிஜ சொரூபத்தைக் காட்டிலும் கற்பனைக் கதாபாத்திரமாகத்தான் திரையில் தோற்றமளிக்கிறார். பல இடங்களில் வரலாற்று உண்மைக்கு மாறான சித்திரிப்பு இடம்பெறுவது அறியாமையினாலா அல்லது வேண்டுமென்றே கதைத் தலைவனது எதிர்மறை அம்சங்களைக் காட்டுவது உசிதம் அல்ல என்பதற்காகவா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும் (5/31/07)

கல்வி, அரசு வேலை வாய்ப்பு முதலானவற்றில் சலுகைகளைப் பெறும் தகுதி இல்லாமை மட்டுமின்றி, பிற சாதியாரால் இளப்பமாகவும் ஏளனமாகவும் பேசப்படும் ஒருவித சமூகப் புறக்கணிப்பு, மேலாதிக்கம் செலுத்தி அனைவரையும் அடக்கி ஆண்டவர்கள் என்று மற்றவர்களால் சுமத்தப்படும் பழி, எல்லா சமூகத் தீமைகளுக்கும் அவர்கள்தாம் மூல காரணம் எனப் பிறரால் நடத்தப்படும் பிரசாரம், சில சமயங்களில் வன்முறைத் தாக்குதலுக்கும் உள்ளாதல், அதற்கு சரியான நடவடிக்கையின்றிச் சட்டம் ஒழுங்கு அமைப்புகள் அலட்சியம் காட்டுதல், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற பழமொழி தமக்குத்தான் பொருந்தும் என்கிற சுய பரிதாபமும் தாழ்வு மனப் பானமையும் எனப் பல்வேறு தாக்கங்களால் நெடுங்காலமாவே தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களின் மனம் குமுறிக் கொண்டிருப்பதை அறிவேன்.

கடிதம் (3/15/07)

மூப்பனார் என்றுமே தம்மை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் எப்போதும் பின்னணியிலேயே இருந்து, அமைப்பைக் கட்டமைக்கும் சாதனையாளர் என்பதை நன்கு அறிவேன்

மறுபடியும் மனு ஸ்மிருதி (3/8/07)

புராணங்களை வரலாறுபோல் பாவித்து வரிக்கு வரி அங்கீகரிப்பது சாத்தியமல்ல. பூடகமான அவற்றை அனுமானங்களின் மூலமாகத்தான் அணுக முடியும். அவை சொல்லும் செய்தியை நேரடியாக ஏற்பதற்குப் பதிலாக அந்தச் செய்தி என்னவாக இருக்கும் என்று யூகிக்கத்தான் இயலும். ஆகவே மனுவைப் புராணக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது பொருத்தமல்ல.

உண்மை கசக்கும் (3/2/07)

காமராஜர் மீதான விசுவாசம் என்பதை எஜமான விசுவாசம் என்கிற கருத்தில் நான் சொல்லவில்லை. அவரது நிலைப்பாட்டின் மீதான விசுவாசம் என்கிற அர்த்தத்தில்தான் சொன்னேன். மூப்பனாருக்கு காமராஜர் மீது இருந்த மரியாதை, ஈடுபாடு, நன்றியுணர்வு ஆகியவற்றுக்கும், காமராஜர் தமது அந்திமக் காலத்தில் எடுத்திருந்த அரசியல் நிலைப்பட்டிற்கு மாறக மூப்பனார் நடந்து கொண்டமைக்கும் சம்பந்தமில்லை.

ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா? (3/1/07)

கிறிஸ்தவம்தான் சமூக நீதியைப் போற்றும் சமயம் என்று பிரசாரம் செய்ய மனு ஸ்மிருதி சரியான ஆயுதம் எனக் கண்டுகொண்டார். அவரைத் தொடர்ந்து பிற ஆங்கிலேயக் கல்வியாளரும் , இறையியலாளரும் ஹிந்து சமயத்தைத் தாக்குவதற்கு மனு ஸ்மிருதியை வலுவாக பற்றிக் கொண்டார்கள். ஆங்கிலேயக் கல்வித் திட்டப்படிக் கற்றுத் தேர்ந்த நம்மவர்களும், சமஸ்கிருதம் தெரியாமல், மூல நூல் என்ன சொல்கிறது எனத் தெரிந்துகொள்ளவும் அக்கரை கொள்ளாமல், ஆங்கிலேயரின் மொழி பெயர்ப்பு என்ன சொல்கிறதோ அதையே திருப்பிச் சொல்லும் வெறும் கற்றுச் சொல்லிகளாக வலம் வரத் தொடங்கிவிட்டார்கள்.

பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? - (2/22/07)

சரியான பார்வையில் மனு ஸ்மிருதி

பச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள் (2/15/07)

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆதங்கம் அவருக்கு எப்போதுமே இருந்து வந்தது. சுதந்திரம் வந்த பின்னரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதைக் கண்டு ஒருவிதக் குற்ற உணர்வை அனுபவித்து வந்தார்.

அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா? (2/8/07)


அம்பேத்கர் எனும் தேசியத் தலைவர் (12/14/06)

சமவாய்ப்பளித்து ஊக்குவிக்கும் நல்லெண்ணம் மிக்க மனச்சாட்சியுள்ளவர்களும் மேல்சாதியினரில் இல்லாமற்போய்விடவில்லை. அதனால்தான் பீமராவ் என்கிற தாழ்த்தப்பட்ட மஹார் வகுப்பு இளைஞன் அம்பேத்கர் என்கிற பிராமண ஆசிரியரின் ஊக்குவிப்பைப்பெற்று அதற்குப் பிரதியாக அந்த பிராமண அடையாளப் பெயரைத் தானும் வைத்துக்கொள்ள முடிந்தது.

எனது பார்வையில் அண்ணா (11/24/06)

எனக்கு முட்டாள்கள்தான் தேவை என்று சொன்ன தலைவரிடமிருந்து, எனக்குச் சிந்திக்கும் திறன் படைத்தோர் தேவை எனக் கேட்டுக்கொண்டு வெளிப்பட்ட தலைவர் அண்ணா! நாற்பது வயதுவரை அடங்கிப் பணிந்து பக்குவப்பட்டு, தேர்ந்து தெளிந்த உறுதிப்பாடு மிக்கவராக வெளிப்பட்ட தலைவர் அண்ணா!

ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும் (11/16/06)

ஹிந்துத்துவம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயிர்த் துடிப்புடன் விளங்கிவரும் ஓர் ரம்மியமான கலாசாரத்தின் பெயர். இந்த மண்ணில் முகிழ்த் தெழுந்த நுட்பமான கலைகள், சிந்தனைத் தடங்களின் கூட்டுப் பெயர் ஹிந்துத்துவம். தமிழின் மிகத் தொன்மையான தொல்காப்பியம் அடையாளங் காட்டுவது ஹிந்துத்துவத்தைத்தான். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் சைவ சித்தாந்தம் வட கோடியின் காஷ்மீரத்தில் எதிரொலித்தது எங்ஙனம்? அதன் ஆதார ஸ்ருதி ஹிந்துத்துவம்

தேடாதே, கிடைக்கும் (11/9/06)


சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்... (11/4/06)

சோஷலிசம் என்கிற அபத்தத்தைச் சேர்த்தது போதாதென்று பின்னர் மதச் சார்பற்ற என்கிற பெயரையும் நமது தேசத்தின் அதிகாரப் பூர்வமான பெயரோடு இணையுமாறு அரசியல் சாசனத்தில் வலிந்து ஒரு திருத்தத்தைச் செய்தார்கள். ஆக, இப்போது நமது அரசியல் சாசனம் அறிவிக்கிற பிரகாரம் நம் நாட்டின் அதிகாரப்பூர்வமான பெயர் இறையாண்மை மிக்க மதச்சார்பற்ற சமதர்ம இந்திய ஜன நாயகக் குடியரசு என்பதுதான்.

பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்! (11/3/06)

பசும்பொன் தேவரின் தகுதி இவ்வாறு குறைக்கப்பட்டது ஒரு திட்டமிட்ட சதி என்றே கூறலாம். தலித்துகளின் ஆலயப் பிரவேசத்திற்குக் கடும் எதிர்ப்பு இருந்த வேளையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தலித்துகள் சென்று வழிபட ஏற்பாடுசெய்த மதுரை வைத்திய நாத ஐயருக்கு உறுதுணையாக இருந்தவர், பசும்பொன் தேவர்.

உள்ளுக்குள் ஒலிக்கின்ற கோஷம் எது? (10/19/06)

பாகிஸ்தானில் ஹிந்துக்களின் பாதுகாப்பற்ற இரண்டாந்தரக் குடிமக்கள் நிலை குறித்து மனித உரிமை இயக்கங்களின் தகவல்கள் கட்டுக் கட்டாக உள்ளன. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப் படுவதற்கு முன்னரே எத்தனை எத்தனை ஹிந்து ஆலயங்கள் ஏதேனும் சாக்கில் இடித்துத் தகர்க்கப் பட்டன என்பதற்கும் கணக்கு இருக்கிறது. கூகிளில் தட்டினால் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிடும்! பாரத தேசத்தின் சகாயம் இன்றேல் தோன்றியே இருக்கமுடியாத பங்களாதேஷிலும் இன்று இதுதான் நிலைமை. பாபர் நினைவு மண்டபம் தகர்க்கப் படுவதற்கு முன்னரே அங்கு இடிக்கப்பட்ட ஹிந்து ஆலயங்கள் எத்தனை என்பதற்கான பட்டியல் தஸ்லிமா நஸ்ரீனின் லஜ்ஜாவில் இருக்கிறது. 1971 ல் ஏறத் தாழ பத்து மாத காலம் கிழக்கு வங்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தாராலும், அங்கு குடியேறியிருந்த பிஹாரி முகமதியராலும் ஈவிர்க்கமற்ற இன அழிப்பு தங்கு தடையின்றி நடந்தது. அழிக்கப்பட்ட 30 லட்சம் வங்காளியரில் 20 லட்சம்பேர் ஹிந்துக்கள். தோல் மரத்த பாரத அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை.

தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா? (10/6/06)

நடுநடுவே எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டாலும் ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு அந்த ஆட்சி திரும்பவும் காங்கிரசின் கைக்கே போய்ச் சேருகிறது. தமிழ் நாடு என்கிற மாநிலம் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கு வங்கம் உள்ளதே என நினைக்கலாம். ஆனால் அங்கும் ஒருமுறை இடதுசாரிகளிடமிருந்து ஆட்சியை காங்கிரஸ் மீட்டது; சிதார்த்த சங்கர் ராய் தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது, 1971ல்.

முகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை (9/28/06)

சாமிநாதன் மீது பொங்கிக் கொண்டு வரும் கோபம் நியாயப்படி யார் மீது வரவேண்டும்? தங்கள் மதத்தின் பெயரால் வன்முறையில் இறங்குபவர்கள், தங்கள் மதத்தை வலுக்கட்டாயமாகப் பிறர் மீது திணிப்பவர்கள் மீதல்லவா வரவேண்டும் கோபமும் தாபமும், குறைந்த பட்சம் நடப்பு நிலவரம் அறிந்து சிந்திக்கும் ஆற்றலும் இருப்பவர்களுக்கு?

திராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை (9/28/06)


மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள் (9/14/06)


தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம் (9/14/06)

தி ஜ ர வின் நூற்றாண்டு நாம் யாரும் கண்டுகொள்ளாமலேயே 20001 ல் வந்துபோய் விட்டது. அவர் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகியும்கூட. ஆனால் அதற்கான சலுகை எதனையும் அவர் பெற்றதில்லை. அதுபற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டோம்.

பட்டறை தயாரித்த பரமார்த்த குரு (9/14/06)

(அமுதசுரபி செப்டம்பர் 2006 இதழில் வெளிவந்த கட்டுரை)

இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும் (9/1/06)

அமெரிக்கா சவூதியையும் தனது நண்பன் என்றுதான் கூறிக் கொள்கிறது! சவூதி அராபியரின் பெட்ரோ டாலர்கள் அமெரிக்க வங்கிகளில்தான் குவிந்துள்ளன! சவூதி செல்வந்தர்களுக்கு கேளிக்கை வசதிகள் அதிகம் கிடைப்பது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்தான்!

திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை (8/31/06)

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு, பற்றாக்குறை, இவைகளைக்கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிரக் கட்சிகளால் அல்ல.

திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள் (8/24/06)

நண்பர்களை நம்மால் தேர்ந்துகொள்வது சாத்தியம். ஆனால் அண்டை வீட்டாரை அவ்வாறு தேர்வு செய்துகொள்வது சாத்தியமில்லைதான். ஆனால் அதற்காக நமது நலன்களை விட்டுக் கொடுத்தாவது அண்டை வீட்டாருடன் சுமுகமாக வாழ முனைவது அறிவுடமையாகாது. மேலும் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள நமது முக்கிய அண்டை வீட்டார், கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிந்துகொள்கிற மாதிரி நாமாகவே உருவாக்கிக்கொண்டவர்கள்தான் என்பதை மறப்பது நல்லதல்ல.

யுக தர்மம் அறியாதவரா சின்னக் கருப்பன்? (8/17/06)

பிரிவினைக்குப் பிறகும் ஹிந்துக்களும் சீக்கியர்களும் மேற்குப் பாகிஸ்தானிலிருந்தும் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்தும் அடித்து விரட்டப்பட்டார்கள். அவர்கள் விட்டு வந்த உடமைகள் பிறரால் ஆக்கிரமித்துக்கொள்ளப்பட்டன. அவற்றுக்கெல்லாம் இழப்பீடு தருமாறு வலியுறுத்தும் கண்டிப்பு நம்மிடம் இருக்கவில்லை.

இருளர் வாழ்வில் இசையும் கூத்தும் (7/27/06)

உலகம் முழுவதுமே வனங்கள் குறுகிக்கொண்டே வருகின்றன. வானுயர்ந்த பசிய மரங்களுக்குப் பதிலாக வானளாவிய காங்கிரீட் காடுகள் எங்கும் வளர்கின்றன. இதனால் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வனவாசிகளும் வலுக்கட்டாயமாக நாட்டுப்புற வாழ்க்கை முறைக்கு இழுத்து வரப்பட்டு அவதிக்குள்ளாக்கப் படுகிறார்கள்.

அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும் (6/8/06)

தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு பெரியார் இருக்கக் கூடுமாயின் அது சுப்பிரமணிய பாரதியாகத்தான் இருக்க முடியும், நாற்பது வயது நிரம்புவதற்கு முன்னரே அவர் மறைந்துவிட்டபோதிலும் என்று நான் பல கூட்டங்களிலும் குறிப்பிட்டு வருகிறேன். வ.உ. சிதம்பரம் அவர்களும் பாரதியாரைப் பெரியார், பெரியார் என்று பல இடங்களில் குறிப்பிட்டு எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி (5/25/06)

மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பல சம்பவங்களை வேண்டுமென்றே மூடி மறைப்பதும், திரித்துக் கூறுவதும் எதிர் விளைவுகளைத்தான் காலப்போக்கில் தோற்றுவித்துவிடுகிறது. வரலாறு என்பது அவரவர் பார்வைக்கு ஏற்றவாறு எழுதி வைக்கப்படுவதுதான் என்று சமாதானம் சொல்வது வரலாறு என்கிற இயலையே ஒரு தேவையற்ற பாடதிட்டமாக்கிவிடக்கூடும்.

இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும் (5/25/06)


ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்..... (3) (5/11/06)

நட்ட கல் பேசுமோ என்கிற சித்தன் வாக்கியம் கல்லைத் தொழாதே என்கிற விக்கிரக நிந்தனை அல்ல. அது நாதன் நம்முள் இருப்பதை நினைவு படுத்துகிற ஒரு முயற்சி. நாதன் உள்ளிருப்பதை அடையாளங் கண்டுகொள்ள முடிந்துவிட்டால் அதன்பின் நட்ட கல்லுக்கு அவசியம் இல்லை. மேலும் நாதன் உள்ளிருப்பது ஓரிரு ஆத்மாக்கள் உணர்ந்திருந்தால் போதாது. சகல ஜீவராசிகளும் உணராவிடினும் குறைந்த பட்சம் தன் அறிவைப் பகுத்தறிவாகப் பெருமை பாராட்டிக்கொள்கிற மானிடப் பிறவி முழுவதுமாவது உணர்ந்திருந்தால் பிரச்சினை இல்லை. நாதனுள் இருப்பது தெரியாதவரை நட்ட கல் பேசுகிற சாத்தியம் இல்லை. நாதனுள் இருப்பது புலப்பட்டுவிடுமானால் நட்ட கல் பேச வேண்டிய அவசியமும் இல்லை

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்... 2 (4/21/06)

குறிப்பாக நம் நாட்டு மக்கள் சமய உணர்விலும் நம்பிக்கையிலும் ஊறிப்போய்விட்டவர்கள். பொது நலனுக்காகப் பாடுபட முன்வருவோரையும், மன ஆறுதல் அளிப்போரையும் அவர்கள் ஒரு தெய்வ அவதாரம் போலவே கருதி வணங்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்... 1 (4/20/06)

ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும் அல்ல என்று அவர்களுக்குப் பதில் சொல்வது வழக்கம். இதுபற்றியெல்லாம் நான் எழுத முற்பட்டால் நானும் ஒரு

ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்... -1 (4/17/06)

எனக்குத் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை எழுத்தால் உணர்த்துதல் உசிதமல்ல, சாத்தியமும் அல்ல என்று அவர்களுக்குப் பதில் சொல்வது வழக்கம். இதுபற்றியெல்ல

ஆத்மா, அந்தராத்மா, ம ?ாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்... 2 (4/17/06)

பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு. இதனால் காலப்போக்கில் அத்தகையோரின் செயல்களை விவாதிப்பதே பெரும் தவறு என்பது போன்ற பிரமை பலரு

உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே (4/7/06)

1940-ல் நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஏட்டளவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் 1948-ல் காந்திஜி இறந்தவுடன் வெறும் இரங்கலுடன் வழக்கம்போல் பார்ப்பனரை ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பதோடு நிற்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு காந்திஸ்தான் எனப் பெயரிடுமாறு யோசனை சொல்வதோடும்

விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள் (3/24/06)

சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வதில் எனக்கே சலிப்பாயிருக்கிறது. படிக்கிறவர்களுக்கு எரிச்சலாகவே இருக்குந்தான். என்ன செய்ய, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான குறை கூறப்படுகிறதே! திண்ணையில் நான் எழுதத் தொடங்கியபோதே என்னுடைய நிலைப்பாடுபற்றித் தெரிந்துகொள

அந்த நான்கு பேருக்கும் நன்றி! (3/24/06)

அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குல்றைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம் அறிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளும் அல்ல. ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் மூடன் மூடன்தான், ஆங்கிலம

ஈ.வே.ரா. சிறியார் அல்ல (3/24/06)

அரவிந்தன் எஸ். நீலகண்டன் எழுதும் கட்டுரைகளை விரைவாகப் படித்துச் செல்லும் வேகத்தில், அவர் மறைந்த பெரியவர் ஈ.வே.ரா. அவர்களைச் சிறியார் எனக் குறிப்பிடுவது என் கவனத்தில் பதியவில்லை. வாசக நண்பர் ஒருவர் இதுபற்றித் தமது வருத்தத்தை வெளியிட்டிருப்பதைப் படித்தபோதுதான் திரு

கடிதம் (3/17/06)

Dear editor: I need some space in your esteemed periodical to clarify certain facts: I saw in the latest Thinnai my article on my return to Thinnai as a contributor that contained my Bangalore expeditions. The title I gave t

ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம் (3/17/06)

[ 'காலச் சுவடு ' மார்ச் 2006 இதழின் தலையங்கம் 'ராணுவத்தில் முஸ்லிம்கள் ' என்ற தலைப்பில் பாரதத்தின் ராணுவத்தில் முகமதியரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக வருந்தி, முகமதியருக்கு மட்டுமின்றி, அனைத்து சிறுபான்மை மதத்தவருக்கும் ராணுவத்தில் உரிய பிரதிநிதித்துவம்

திரும்பவும் திண்ணையில் அமரும் துணிவு பெறுகிறேன் (3/3/06)

கடந்த காலங்களில் சொல்லடிகளுக்கு மட்டுமின்றிக் கல்லடிகளுக்கும், ஏன், ஒருமுறை திராவக வீச்சுக்குங்கூட இலக்கானவன்தான். ஆகையால் திண்ணையிலும் சொல்லடிபட நேர்ந்ததில் அப்படியொன்றும் நொந்துபோய்விடவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தெருவில் இறங்கியதுமே கண்டதையும் மிதிக்க நேரிடும

இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம் (3/3/06)

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததும் கீழே சாய்ந்த காந்திஜி 'ஹே ராம் ' என்றெல்லாம் சொல்லவில்லை என்று அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னதை நான்தான் திண்ணையில் பதிவு செய்தேன். காரணமாகத்தான். ஆனால் விவரம் அ

துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும் (2/17/06)

துக்ளக் 1-9-1982 இல் வெளிவந்த கட்டுரை எம் ஜி ஆருக்கு அனுப்பப்பட்ட கிறுஸ்துவத் துண்டுப்பிரசுரம். எம் வேணுகோபால் கமிஷனுக்கும் சமர்ப்பிக்கப

கடிதம்- ஆங்கிலம் (2/10/06)

Dear editor, Thanks to reader Dr. Sivan for enlightening me on the venue of the meeting of Anna with Medical College students. My presence at the meeting was NOT to cover the occasion. I went to meet Anna in the morning on that day and he told me

இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம் (2/10/06)

இளந் தலைமுறையினர் எவ்விதப் பிரமைகளுக்கும் ஆளாகாமல், பாரபட்சமின்றிக் கவனமாக மதிப்பீடு செய்வதில் கண்டிப்பாக இருக்கிறார்கள் என்பது அண்ணாவைப் பற்றிய எனது கட்டுகரைகளைப் படித்துவிட்டு புதிய மாதவி தெரிவித்த கருத்துகளிலிருந்து நிரூபணமாகிறது. இது மனதுக்கு மிகவும் நிறைவு தருகிற வ

எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ? (2/3/06)

அடிப்படையில் பார்க்கிறபோது வெறும் துவேஷத்தின் வெளிப்பாடுகளாகத்தான் எதிர்வினைகள் வருகின்றன. அவற்றுக்கும் ந்ிதானமிழக்காமல், மனதைப் புண்படுத்தாமல், விளக்கம் அளிக்க இயலும் என்றாலும், இவ்வாறு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பதாலேயே சொல்லவேண்டிய எத்தனையோ சங்கதிகளைச் சொ

மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன் (2/3/06)

நண்பர் கற்பக விநாயகம் எனது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் தவறான தகவல்களை அளிப்பதாலும் எனது தகவல்களை முழுமையாகப் படிக்காமலேயே பதிலிறுக்கத் தொடங்கிவிடுவதாலும் எனக்கு ஆதாரப்பூர்வமாகத் தகவல்களைப் பதிவு செய்யும் வாய்ப்பு மேலும் அதிகரிப்பதென்னவோ வாஸ்தவந்தான். இத

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? - 2 (1/27/06)

அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா ? ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும் அண்ணாவின் குணநலன்களுக்கும்

பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ? (1/20/06)

ஹிந்து சமூகம் காலங்காலமாகப் பிளவுபட்டுக் கிடப்பது புதிய செய்தி அல்ல. அப்படிப் பிளவுண்டு கிடப்பதால் அது மேலும் பிளவுபட்டுச் சிதறவேண்டும் என எவரேனும் விரும்புவார்களேயானால் அது துவேஷத்தின் அடிப்படையில் எழும் ஆசையாகத்தான் இருக்கமுடியும். விவேகம் அற்ற வெறும் துவேஷத்துடன் தெரிவிக்

ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ? (1/20/06)

அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான் அது உதவுமே யன்றி மனமாற்றத்திற்கு வழியே இராதுபோய்விடுமே! எனக்குக் கற்

எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி... (1/13/06)

கோபால் ராஜாராம் ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையை மிகவும் கவனமாகப் படித்தேன். எதிர்வினைகள் இவ்வாறு மறு பரிசீலனை, மறு சிந்தனைகளுக்கு வாய்ப்பளிப்பனவாக இருந்தால் கடந்த கால நிகழ்வுகளை புரட்டிப் புரட்டிப் பார்த்து முடிவுகளுக்கு வருவது எளிதாகும்.

மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும் (1/13/06)

(காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித முன் முடிவுகளோடும் கட்டுரையுள் புகும்வித

சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ? (12/9/05)

சிறுபான்மையினர் மனம் புண்பட இடங் கொடுத்துவிடலாகாது, எவ்வளவு நிர்ப்பந்தமானாலும், என்ன விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் காக்கவேண்டும் என்றெல்லாம் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, கடைந்தெடுத்த கோழைத்தனமான பயங்கர வாத நாசவேலைகளை உறுதியோடு ஒடுக்குவதற்குப் ப

ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில் (12/9/05)

ஈ.வே.ரா. பற்றித் 'திண்ணை 'யில் எழுதியதைப் படித்துவிட்டு ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் மெயில்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாராட்டியும் வருகின்றனதான். ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் வெளியிடுபவைதாம். ஈ.வே.ரா. பற்றிய எனது கருத்து

அயோத்திதாசர் ஈ. வே.ரா நிலைப்பாடு: சிவக்குமார் எதிர்வினையின் தூண்டுதலால் எழும் சில சிந்தனைகள் (12/2/05)

பி. கே. சிவக்குமார் கடிதம் படிக்க வாய்த்ததில் மகிழ்ச்சி. கோ. ராஜாராம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் என்னையும் நான் நடத்திய கால் இதழையும் நினைவுகூர்ந்த தகவலை அவர் தந்தமைக்கு நன்றி. அன்றைய சிற்றிதகழ்கள் பெரும்பாலும் சந்தைக்கடை சச்சரவுகள் மாதிரியான

நந்தன் இல்லாமல் நடராஜரா ? (11/25/05)

பிரபஞ்ச வெளியின் இடையறாத, இம்மியளவும் பிசகாத இயக்கத்தை உருவகப்படுத்தும் நடராஜப் பெருமான் நடமாடும் திருத்தலம் சிதம்பரம். பொதுவாக மற்ற சிவாலயங்களின் கருவறைகளில் அருவுருவ லிங்கமாகவே காட்சிதரும் சிவபெருமான், நடன சபாபதியாகக் காட்சி தந்து ஆறுகால பூஜைகளையும் ஏற்றுக் கொ

கடிதம்: (11/18/05)

அன்புள்ள 'திண்ணை ' ஆசிரியருக்கு, 'திண்ணை 'யின் சமீப இதழில் 'அயோத்தி தாசர் ஆய்வுகள் ' என்ற ராஜ் கவுதமனின் நூலை பாவண்ணன் ஆழமாகவும் விரிவாகவும் நுட்பமாகவும் மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு அறிமுகம் செய்து எழுதியிருப்பது, எடுத்துக்கொள்ளும் வேலையை முழுமை

கடிதம் (11/18/05)

'அவுரங்கசீப்பின் உயில், ' கூண்டில் ஏற்றப்பட்ட குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் போல் மிகத் துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறது. பெற்ற தகப்பனுக்குத் தான் இழைத்த கொடுமைகளும், நியாயப்படி ஆட்சிக்கு வரவேண்டிய தன் மூத்த சகோதரன் தாரா ஷன்க்கோவைச் சித்ரவதை செய்துகொன்

ஜயலலிதாவின் குவாலிஃபிகேஷன்: சு.ராவுடனான கலந்துரையாடலையொட்டிக் கொஞ்சமாய்ச் சில பழங்கதைகள் (11/11/05)

சுந்தர ராமசாமியுடனான உரையாடலில் எம்ஜிஆர் ஜயலலிதா பற்றிய சு.ரா. மற்றும் சிலரின் கருத்துகளைப் படித்தேன். இது தொடர்பாக எனக்குத் தெரிந்த விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது உபயோகமாயிருக்கக் கூடும். நான் ஜயலலிதாவின் ஆதரவாளன் அல்ல என்பதையும் அ

சு.ரா வுடனான கலந்துரையாடல் மேலும் கிளர்த்தும் என்ணங்கள் (11/11/05)

'திண்ணை 'யில் சு.ரா வுடனான கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக மட்டுமின்றிப் பல கோணங்களில் சிந்தனையைத் தூண்டுவதாகவும் போய்க்கொண்டிருக்கிறது. அவர் இருக்கும்போதே இது வெளியாகி, அதனைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால் நான் உற்சாகத்துடன் சில விஷயங்களைச் செ

ஜாதியில்லை, வர்ணமுண்டு (11/11/05)

( 'அமுத சுரபி ' 2005 தீபாவளி மலரில் வெளிவந்தது) கங்கைக் கரைப் படித்துறையின் கடைசிப் படியில் மார்பளவு நீரில் சிரசு அமிழ மூழ்கியெழுந்தான், சுப்பையா. அப்படி மூழ்கியெழுகிற ஒவ்வொரு முறையும் சங்கற்பம் மாதிரி தனக்குள் 'எனக்கு ஜாதி ஏதுமில்லை. அதற்குத் தலை முழுக

ராஜ் கவுதமன் எழுதிய 'க. அயோத்திதாசர் ஆய்வுகள் ': ஒரு திறனாய்வு (11/4/05)

(அக்டோபர் 29, 2005 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் நடைபெற்ற பொற்றாமரை கலைஇலக்கிய ஆய்வரங்கக் கூட்டத்தில் உரையாக வாசிக்கப் பட்ட கட்டுரை) திறனாய்வு செய்வதற்காக நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள நூல் 'க. அயோத்திதாசர் ஆய்வுகள்.

கடிதம் - (ஆங்கிலம்) (10/21/05)

Dear Editor, Plese permit me to record my profound grief on the demise of Sri Sundara Ramaswami, as I came to know about it only through 'Thinnai. ' It is shocking to realise that Sundara Ramaswami will no longer be amidst us physically

அதே கனவு (7/15/04)

பள்ளிவிட்டு ஓடி வந்த பாலகன் என் தோளிரண்டைக் கட்டிக்கொள்ள முத்தமிட்டு முத்தமிட்டு மகிழ்கிறேன். பள்ளியறை பஞ்சனையில் பாவையவள் முகமேந்தி பவழவாய் முத்தமிட்டு கதைகள் பலபேசி கவலையின்றி துயில்கிறேன். மணியடிக்கும் ஒலிக்ே

சொர்க்கம் (6/24/04)

விடைதேடும் வாழ்க்கையில் உறவுகளை மறந்து பொருள்தேடிப் பறந்ததால் சொந்த பந்த பாசங்கள் நெஞ்சின் ஓரத்தில் நினைவுகளாய்... காலங்கள் கரைந்தோட தேடிவந்த தேவைகளில் சிற்சில பூர்த்தியாக


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)

Design element  

Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.