Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Thursday November 22, 2007

கலவரப் பகுதி

அப்துல் கையூம்


கலவரப் பகுதியில்

உன்

கன்னக் குழியையும்

சேர்த்தாலென்ன ..?

களேபரம்

பற்றிக் கொண்டது

எனக்குள்ளேயும் !

ரப்பர் குண்டுகளாய்

கவசமேந்தா

என் இதயத்தை

துளைத்தெடுக்கும்

உன் பொல்லாத

கள்ளப் பார்வை !

‘கன்னி’வெடிகளாய்

உன்

சின்னக் குறும்பு

சிணுங்கள்கள் !

கண்ணீர்ப் புகையாய்

உன் நினைவுகள்

என் மூச்சை முட்டும்

என் மனதுக்கு

எனக்கு நானே

பிறப்பித்துக் கொண்ட

ஊரடங்குச் சட்டம்

வன்முறையைத்

தூண்டியது

நிறுத்திடு; போதும்.

என்னை

என் கிடப்பில்

அப்படியே

விட்டு விடு !


vapuchi@hotmail.com




Copyright:thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.