Sunday July 25, 2010
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் - 5
ராமச்சந்திர கோபால்
உயிர்மெய் எழுத்துக்களை கவனமாக கற்றுகொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.
கூடவே இரண்டு மூன்று எழுத்துக்களை சேர்த்து எழுதும் பழக்கம் சமஸ்கிருதத்தில் உண்டு.
உதாரணமாக க்ர என்ற சொல் அடிக்கடி சமஸ்கிருதத்தில் (உக்ர, சீக்ர) ஆகியவை, த்ர என்ற ஒலி (யந்த்ர, மந்த்ர போன்றவைகளில்) வருவதால் அவற்றை கூட்டாக எழுதும் பழக்கம் உண்டு.
त्+म = त्म
த்+ம = த்ம
ण्+य=ण्य
ண்+ய=ண்ய
न्+त्+य= न्त्य
ன்+த்+ய = ன்த்ய
म्+न = म्न
ம்+ன=ம்ன
ब्+व=ब्व
ப்+வ = ப்வ
மேலே கண்டது போல மேலிருந்து கீழே வரும் கோட்டை நீக்குவது மூலமாக அதன் புள்ளிவடிவத்தை அடையலாம்.
மேலும் சில எழுத்துக்கள் வேறுமாதிரி மாற்றம் அடைகின்றன
र्+प=र्प
ர்+ப=ர்ப
சமஸ்கிருத ப எழுத்தின் மேலே உள்ள சுழியை கவனிக்கவும். இது வந்தால் ர் சொல்லி அதன்பின் அந்த எழுத்தை சொல்லவேண்டும்.
கூட்டெழுத்து எழுதும்போதும் ர் வந்தால் அது மேலே சுழியாக மாறும்
र्+ध्+वा என்று கூட்டினால், र्ध्वा என்று மாறும்.
ர்+த்+வா என்பது ர்த்வா என்று ஒலிக்கும்
ஆனால், சேர்க்கைக்கு பின்னால் ர் வந்தால் எழுத்து வேறுவிதமாக மாற்றமடையும்
உதாரணமாக ப்+ர என்பது ப்ர என்று ஆகும்
இதை சமஸ்கிருதத்தில் प्+र = प्र என்று ஆகும் ப் எழுத்துக்க்கு கீழ் இருக்கும் கோட்டை கவனியுங்கள்.
இதே போல
द्+र = द्र என்று ஆகும்
த்+ர= த்ர
ट्+र = ट्र
ட்+ர = ட்ர
त எழுத்து மட்டும் வேறுவிதமாக மாற்றமடையும்
त्+र = त्र த்ர
இரண்டு எழுத்துக்கள் கூட்டெழுத்தாக ஆகும்போது வித்தியாசமாக ஆகின்றன
க்+ஷ = க்ஷ
ज्+ञ= ज्ञ
ஜ்+ஞ =ஜ்ஞ
இவை அனைத்தும் சம்யோக எழுத்துக்கள் என்று அழைக்கப்படும்
கீழ்க்கண்ட அட்டவணையை பார்க்கவும்
Copyright:thinnai.com