கதைகள்
|
அரசியலும் சமூகமும்
தமிழில் இணைய உள்ளடக்க உருவாக்கம் கோபி பெப்ரவரி 21 அன்று பன்னாட்டுத் தாய்மொழி நாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பொன்றில் விக்கிப்பீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகள் வெளியிடுவதற்காக 'வலைக்களஞ்சியம்' எனும் பெயரில் இயக்கம் ஒன்று தொடங்கத் தீர்மானிக்கப்பட்டமை தொடர்பில் செ. ச. செந்தில்நாதன் மறுநாள் ஒரு விரிவான வலைப்பதிவிட்டிருக்கிறார். | தொடர்ந்து படிக்க... |
|
அபூர்வ மனிதர் சுஜாதா பாவண்ணன் தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை எடுத்துக்கொண்டாலும் கச்சிதமாகவும் சரியான முறையிலும் செய்து முடிக்கிற திறமையாளர்கள் ஒரு சிலரையும் நாம் பார்த்திருக்கலாம். உற்சாகம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் திறமையாளர்களாக இருப்பதில்லை. திறமையாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்வதுமில்லை. உற்சாகமும் திறமையும் ஒருங்கே பொருந்திய அபூர்வமான மனிதர்கள் மிகவும் குறைவு. இந்தச் சிறிய பட்டியலில் அடங்கக்கூடிய அபூர்வமான மனிதர் சுஜாதா என்கிற எஸ்.ரங்கராஜன்.
| தொடர்ந்து படிக்க... |
|
கலைஞருக்கு வயதாகி விட்டதா? ராஜா வாயிஸ் , மும்பை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு எத்தனை வயதிருக்கும் என்பது ஊகித்துப்பார்க்க வேண்டியதில்லை. இப்போதெல்லாம் தனியாக அவரால் நடந்து போக முடிவதில்லை. முன்னர் தயாநிதி மாறன் இருந்த இடத்தில் இப்போது கைகத்தடி கொடுக்கலாமா என்று மருத்துவர்களும் அவர் அரசியல் நண்பர்களும் ஆலோசனை தந்துகொண்டிருந்தாலும் அவ்வப்போது பலர் என்னை ஏமாற்றினாலும் தொடர்ந்து மனிதர்களைத்தான் நான் நம்புவேன் என்று அடம்பிடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் ராசாவையோ அல்லது வேறு யாரையாவது பிடித்துக்கொண்டு அவர் பொதுநிகழ்சிகளில் கலந்து கொள்ளுகிறார். | தொடர்ந்து படிக்க... |
|
|
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
|
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
கவிதை எழுதுவதற்கு லைசென்ஸ் அ.முத்துலிங்கம் பில் பிரைசன் என்ற பிரபல எழுத்தாளர் சமீபத்தில் கனடாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் 'உங்களுக்கு அதிக பயம் தரக்கூடியது என்ன?' என்று கேட்டார்கள். அவர் கண்வெட்டும் நேரம்கூட எடுக்காமல் 'வெற்றுப் பேப்பர்' என்று பதில் கூறினார். ஓர் எழுத்தாளருக்கு வெள்ளைத் தாள்தான் எதிரி. எங்கே ஒரு தாளைக் கண்டாலும் அவர் அதை நிரப்பவேண்டும். கல்லைக் கண்ட சிற்பி செதுக்குவதுபோல, இயற்கை காட்சியை கண்ட ஓவியர் வரைவதுபோல, எழுத்தாளர் பேப்பரைக் கண்டபோதெல்லாம் அதில் ஏதாவது எழுதவேண்டும். அது நிரம்பாதவரைக்கும் அவர் நிம்மதி அடைவதில்லை.
| தொடர்ந்து படிக்க... |
|
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|