Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Thursday May 1, 2008

பெயர் முக்கியம்!

இப்னு பஷீர்


சமீபத்தில் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. American Council of Learned Societies என்ற அமைப்பு சையிது குதுப் என்ற எகிப்து அறிஞர் அரபியில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் "Social Justice in Islam" என்ற தலைப்பில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முதல் பதிப்பு 1953-ல் வெளிவந்தது. இந்நூலின் மொழி பெயர்ப்பாளர் ஜான் ஹார்டி (John B. Hardie) அவரது முன்னுரையில் எழுதுகிறார்:

"The name of the faith was significant; Islam means committing oneself to God, and those who do so are Muslims. The terms Muhammedanism and Muhammedan are frequently used in the West, but are not popular among Muslims themselves, since they hold, and rightly, that they are not worshippers of Muhammad, who was simply the Messenger or Apostle of Allah."

'இந்த மார்க்கத்தின் பெயர் முக்கியமானதொரு விஷயம். இறைவனுக்குக் கடமைப் பட்டவராக ஒருவர் தம்மை ஆக்கிக் கொள்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். அவ்வாறு செய்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். 'முகமதியம்' 'முகமதியர்' போன்ற சொற்கள் மேற்கத்தியர்களால் அதிகமாக பயன்படுத்தப் பட்டாலும் முஸ்லிம்களிடையே இவற்றிற்கு ஆதரவு இல்லை. அவர்கள் முஹம்மதை வணங்குபவர்களல்ல என்பதால் அவர்கள் சொல்வது சரிதான். முஹம்மது ஒரு இறைத்தூதர்தானே தவிர வணங்கப் படுபவர் அல்லர்.'

இந்த வாசகங்களை எழுதிய ஜான் ஹார்டி ஒரு முஸ்லிம் அல்ல என்றாலும் இஸ்லாமைப் பற்றி அவர் சரியாக புரிந்து வைத்திருப்பதாக தெரிகிறது.

ஊதுற சங்கை ஊதி வைப்போம்!


-இப்னு பஷீர்

ibnubasheer@gmail.com

http://ibnubasheer.blogsome.com/




Copyright:thinnai.com 
Design element  

Sunday August 29, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.