Thinnai
AnyindianDesign element
Thinnai
Thinnai Design element
திண்ணை    



ooo ooo ooo ooo
Main Sections
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்



Thursday March 5, 2009

'' இடை '' பற்றிய கட்டுரைக்கு ஒரு இடைச் செருகல்

வைதீஸ்வரன்


அப்துல் கைய்யூம் பெண்களின் ''பாடல் பெற்ற ஸ்தலமான ''

இடையைப் பற்றி பல கோணங்களிலும் விவரித்திருந்தார் ஸ்வாரஸ்யமான நடை யோட்டம்... '' இஞ்சி '' இடுப்பு பாடல் பிரபலமான போது

அது எல்லோரையும் தலையை சொறிய வைத்தது

உண்மை தான் ... அது பற்றி என்னை சமாதானப் படுத்திக் கொண்ட

ஒரு விளக்கம் என்னவென்றால் ....... நாட்டுப் பாடல் காரன் சில சமயம் நாகரீக மோஸ்தருடன்

எழுத வேண்டுமென்று விரும்புவதுண்டு.

தெருக் கூத்தில் புராணப் பாடல்களில் கூட சில சமயம்

''டைம் என்னா '' ராஸ்கோல் '' என்ற வார்த்தைகளை

இடை செருகுவது உண்டு... அதே போல ''இஞ்சி '' இடுப்பு என்று அவன் சொல்லுவது

அவள் இடுப்பு சுற்றளவை அளந்து பார்த்தால் ஒரு

இஞ்சி அதாவது ஒரு அங்குலம் தான் இருக்கும்.. அத்தனை

சிறுத்த இடை என்று ''புதுமையாக '' சொல்லிப்

பார்க்கிறான் ... இப்படி இடையை சுற்றி இஷ்டம் போல் ''சுற்றுவது ''

ஒரு நல்ல ஸ்வாரஸ்யம்

--வைதீஸ்வரன் --


vydheesw@yahoo.com




Copyright:thinnai.com 
Design element  

Sunday September 5, 2010 Copyright © Authors - Thinnai. All rights reserved.